KATAKAM Guru Peyarchi Palan
கடக ராசி நேயர்களே, (கடக ராசிக்கு குரு ஆறாவது மற்றும் ஒன்பதாம் வீட்டின் அதிபதியாகும்.) குரு உங்கள் ராசிக்குள் வந்து ஜென்ம குருவாக இடம் மாறுகிறார், ஜென்ம குருவாக ராசிக்குள் வருவது மிகவும் நன்மை பயக்கும். இது வரை 12-ம் இடத்தில் இருந்து வந்த குரு பகவான் 26-05-2026 முதல் உங்கள் ஜென்ம ராசிக்கு செல்கிறார். ஜென்ம ராசியை குரு கடக்க போகும் குரு ஒரு வருட காலம் சிறப்பாக இருக்கும். பொறுப்புகளும், நிம்மதியற்ற போக்கும் அதிகரிக்கும். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற சிரமப்பட வேண்டியிருக்கும் கோபம், விரோத மனப்பான்மை அதிகரிக்கும். உணவில் கவனம் தேவை. எதை நினைத்தும் வீணாக பயப்பட வேண்டாம். குடும்ப விஷயத்தில் மற்றவர்கள் தலையிடுவதை அனுமதிக்க வேண்டாம். எவருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில் குறுக்கே நிற்கவேண்டாம். தங்க ஆபரணங்களை கடன் வாங்கவோ, தரவோ வேண்டாம். உங்கள் வங்கியில் கணக்கில் போதிய பணம் இருக்கிறதா என்று பார்த்துவிட்டு காசோலை கொடுப்பது நல்லது. புதியவரை நம்பி முடிவுகள் எடுக்க வேண்டாம் இந்த குரு பெயர்ச்சியால் எந்த ஒரு விஷயமும் நீண்ட இழுபறிக்கு பின்னரே உங்களுக்கு சாதகமாக நடக்கும். வெளிநாடு சம்பந்தப்பட்ட அணைத்து விஷயங்களும் உங்களுக்கு கைகொடுக்கும். வெளிநாடு சென்று வரும் வாய்ப்பு வரும். பயணங்களால் ஆதாயம் உண்டு. பொறுப்புகளும், கடமை உணர்வுகளும் அதிகரிக்கும். பண வரவு அதிகமாகும், செலவுகள் படிப்படியாக குறையும். பொருளாதார ரீதியாக மிக பெரிய வளர்ச்சியை எதிர்பார்க்கலாம். மறைமுக வழியில் தன லாபங்கள் இருக்கும். தர்ம காரியங்கள் செய்ய முடியும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். சொந்த பந்தங்களால் ஒரு சிலருக்கு டென்ஷன் ஏற்படும். உறவினர்களிடம் தேவையற்ற பேச்சுகளை தவிர்க்கவும். வண்டி, வாகனங்களில் மிகுந்த கவனம் தேவை. குடும்பத்தில் பலரும் அனுசரணையாக இருப்பார்கள். சிலருக்கு வீடு, மனை அமையும். திருமண முயற்சிகள் சாதகமாகும். புதிதாக திருமணம் ஆனவர்களுக்கு மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும். கணவன் மனைவி உறவு வலுப்பெறும். குழந்தை இல்லாதவர்களுக்கு விரைவில் புத்திர பாக்கியம் கிட்டும். உங்கள் தாய் வழியில் தன வரவு வரும். உறவினர், நண்பர்களால் அன்பு தொல்லை அதிகரிக்கும். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருக்கவும். கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை இருக்கும். பூர்விக சொத்து வகையில் ஒரு சில பிரச்சனைகள் வாய்ப்புண்டு. வெளிவட்டாரத்தில் மதிப்பு கூடும். தியானத்தால் மன நிம்மதி கிடைக்கும். குல தெய்வ வழிபாடு மூலம் சிறப்பான பலனை பெற முடியும். எடுத்த காரியங்கள் வெற்றி பெறும். கூடுமானவரை உங்களை சுற்றி இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. அடுத்தடுத்து வேலைச் சுமை இருந்துகொண்டே இருக்கும்.பணம் சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் வரும். சிலருக்கு உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படக்கூடும். புதிய திட்டங்களில் பொறுமையும், நிதானமும் தேவை. உத்யோகத்தில் இருந்து வந்த நெருக்கடிகள் குறையும். சொந்தமாக தொழில், செய்து வருபவர்களுக்கு பெயர், புகழ் கிடைக்கும். இந்த குரு பெயர்ச்சியில் ஜென்ம குரு சுமாரான பலன்கள் தந்தாலும் கெடுதல் எதையும் குரு பகவான் செய்ய மாட்டார்.
பரிகாரம் : தாயில்லாப் பிள்ளைக்கு இயன்றவரையில் உதவுங்கள். தடைகள் நீங்கும்.
Astrology Predictions Written By :
" Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology).
Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831