MAKARAM Guru Peyarchi Palan
மகர ராசி நேயர்களே, (மகர ராசிக்கு குரு மூன்றாவது மற்றும் பன்னிரெண்டாவது வீட்டின் அதிபதியாகும்.) குரு உங்கள் ராசிக்கு 7ம் வீடான களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார். இது வரை ராசிக்கு 6ம் இடத்தில் இருந்த குரு பகவான் 26-05-2026 முதல் 7ம் வீட்டிற்கு செல்கிறார். 7ம் வீடு குருவிற்கு சிறப்பு வாய்ந்த இடம். கடந்த ஒரு வருட காலமாக சிரமத்தினை சந்தித்து வந்த உங்களுக்கு இந்த குருபெயர்ச்சி மன நிம்மதியை தரும். 6-ம் இடத்தில் இருந்து ஏழாம் இடத்திற்கு வரும் குருபகவான் தனது நேரடி பார்வையை உங்கள் ராசியின் (மகர) மீது செலுத்துவதால் குரு பலத்தினை பெற முடியும். " குரு பார்க்க கோடி நன்மை" என்பது போல் தடைபட்டிருந்த உங்கள் ஆசைகளும், விருப்பங்களும் வருகின்ற ஒரு வருட காலத்திற்குள் நிறைவேறும். உங்கள் ராசிக்கு 7 ஆம் வீட்டில் அமர்ந்து உங்களை நேருக்கு நேர் பார்க்கிறார். எதிலும் உங்கள் கை ஓங்கும். வாழ்வின் நெளிவுசுளிவுகளைக் கற்றுக் கொள்ள முடியும். தம்பதிக்கு இடையே நெருக்கம் அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். திருமணம் தடைப்பட்டிருந்த அன்பர்களுக்குத் திருமணம் கூடிவரும். வி.ஐ.பிகளின் நட்பு கிடைக்கும். அநாவசியச் செலவுகளைக் கட்டுப்படுத்த பார்க்கவும். எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். சிலர் வங்கிக் கடன் உதவி கிடைத்து, புது வீடு கட்டி குடிபயறுவீர்கள். இந்த குரு பெயர்ச்சியால் செல்வாக்கு மேம்படும், பணப்புழக்கம் அதிகரிக்கும். அடுத்த ஓராண்டு காலத்திற்கு குருவின் பார்வையிலே விருச்சிக ராசி வருகிறது என்பது சந்தோஷமான விஷயம். காதல் வயப்பட்டவர்களுக்கு விரைவில் காதல் கைகூடி திருமணத்தில் முடியும். திருமண வயதில் உள்ளவர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும். மேலும் தடைப்பட்ட பல சுப காரியம் இனிதே நடைபெறும். ஏற்கனவே விவாகரத்து பெற்ற ஆண், பெண்களுக்கு மறுமணம் நடைபெற நிறைய வாய்ப்புண்டு. பிரிந்திருந்த கணவன் மனைவி ஒன்று சேருவர். குழந்தை இல்லாதவர்களுக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும். பொருளாதார உயர்வு இருக்கும், மனதில் தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். உடல் உபாதைகள் நீங்கும். உங்களுடைய திறமைக்கு நல்ல அங்கீகாரம் கிடைக்கும். அறிவாற்றலை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் அமையும். தடைப்பட்ட காரியங்களையெல்லாம் விரைந்து முடிக்க முடியும். வி.ஐ.பிக்களின் அறிமுகம் கிடைக்கும். கொடுத்த கடன் திரும்ப வரும். குலதெய்வ பிரார்த்தனைகள் நிறைவேறும். இழுபறியில் இருந்த வழக்குகளில் சாதகமான தீர்ப்பு வரும். உத்யோகத்தில் வருமானம் கூடும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டு. தொழில், வியாபாரம் சிறப்படையும். குரு பகவானின் பார்வை பலம் அடுத்த ஒரு வருடத்திற்கு உங்கள் ராசியின் மேல் விழுவதால் நற்பலன்களை நிச்சயம் எதிர்பார்க்கலாம்.
பரிகாரம் : முடிந்தால் ரத்த தானம் செய்யுங்கள்.முடிவுகள் சிறப்பாக அமையும்.
Astrology Predictions Written By :
" Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology).
Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831