MEENAM Guru Peyarchi Palan
மீன ராசி நேயர்களே, (மீன ராசிக்கு குரு முதலாவது மற்றும் பத்தாவது வீட்டின் அதிபதியாகும்.) குரு உங்கள் ராசிக்கு 5ம் வீடான பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு இடம் மாறுகிறார். இது வரை 4ம் இடத்தில் இருந்து வந்த குரு பகவான் 26-05-2026 முதல் 5ம் இடமான சிறப்பான ஒரு இடத்திற்கு மாறுகிறார். 5ம் இடம் என்பது சிந்தனையை பற்றி சொல்லும் ஸ்தானம் என்பதால் அங்கு வர உள்ள குரு பகவான் மனதில் நற்சிந்தனையை உண்டாக்குவார், மேலும் சிறப்பு பார்வை ராசியின் மீது விழுவதால் மனதில் தோன்றும் புதுமையான எண்ணங்களை உடனுக்குடன் செயல்படுத்தி வெற்றி பெற முடியும். புதிய பாதையில் பயணிக்க முடியும். அடிப்படை வசதி வாய்ப்புகள் உயரும். வீடு களைகட்டும். கணவன் மனைவிடையே அன்யோன்யம் ஏற்படும். பெண் பிள்ளையின் திருமணத்தைக் கோலாகலமாக நடத்த முடியும். மகனுக்கு நல்ல வரன் பார்த்து அமைத்து தர இயலும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். பூர்வீகச் சொத்து பங்கு கைக்கு வரும். தாய்வழி உறவினர்கள் உங்களைப் புரிந்துகொள்வர். சொந்தமாக இடம் வாங்கும் யோகம் உண்டாகும். குலதெய்வ நேர்த்திக்கடனை நிறைவேற்ற முடியும். உங்கள் காரியத்தில் கண்ணும் கருத்துமாக இருக்கவும். அடிப்படை வசதிகள் பெருகும். குடும்பத்தில் எல்லா வகையான நன்மைகளும் கிடைக்கும். உடலிலும் மனதிலும் புது தெம்பு பிறக்கும். எங்கும் எப்போதும் உற்சாகமாக இருக்க முடியும். நினைத்த காரியங்கள் நினைத்தபடியே நிறைவேறும். எந்த ஒரு செயலையும் உடனுக்குடன் நிறைவேற்ற முடியும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் குறையும். சிலருக்கு சொந்தமாக வீடு வாங்கும் யோகம் உண்டாகும். புது வண்டி, வாகனம் வாங்க முடியும். திருமண காரியம் நடைபெறும். சுப செலவுகள் கூடுதலாகும். பழைய பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். பழைய சொந்த பந்தங்கள் மீண்டும் வந்து இணைவர். கணவன் மனைவிக்குள் நல்ல புரிதல் இருக்கும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம். எதிரிகள் ஒதுங்கிய நிற்பர். நட்பு வழியில் கவனம் தேவை. தாயாரின் உடல் நலம் சீராகும். வழக்குகளில் சாதகமான தீர்ப்பு வரும். புதிய சொத்து சேர்க்கையும் ஒரு சிலருக்கு அமையும். விலகி நின்ற நபர்கள் விரும்பி வந்து இணைவர் குடும்பத்தினருடன் சென்று குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்ற வும். வாழ்க்கையில் நல்ல திருப்பங்கள் ஏற்படும். உத்யோகத்தில் கூடுதல் கவனம் தேவை. உத்யோகத்தில் அதிக ஆர்வம் கூடும். பெரிய நிறுவனத்தில் நல்ல வேலை அமையும். தொழில், வியாபாரம் தொடர்பாக நிறைய தொடர்புகள் கிடைக்கும். இந்த குரு பெயர்ச்சியில் பல நன்மைகளும், திடீர் அதிர்ஷ்டங்களும் ஏற்படும்.
பரிகாரம் : துப்புரவுப் பணியாளருக்கு பொருளுதவி செய்யுங்கள். நினைத்தது நிறைவேறும்.
Astrology Predictions Written By :
" Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology).
Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831