MESHAM Guru Peyarchi Palan
மேஷ ராசி நேயர்களே, (மேஷ ராசிக்கு குரு பகவான் ஒன்பதாவது மற்றும் பன்னிரண்டாவது வீட்டின் அதிபதியாகும்.) குரு உங்கள் ராசிக்கு 4ம் வீடான சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார். இது வரை 3ஆம் இடத்தில் இருந்து வந்த குருபகவான் 26-05-2026 முதல் 4-ம் இடத்திற்கு செல்கிறார். 4ஆம் இடத்தில் அமரும் குரு சுமாரான பலன்களை தான் தருவார் என்பதால் கெடுதல் ஏதும் மேஷ ராசிக்கு இல்லை. 4ஆம் இட குரு கொஞ்சம் கஷ்டங்களைத்தான் அதிகம் தருவார் என்றாலும் கவலை வேண்டாம். உங்களின் பலம் மற்றும் பலவீனத்தைத் தெரிந்துகொள்வது நல்லது. பண வரவு இருந்தாலும் செலவுகளும் துரத்தும். மனஇறுக்கம் அதிகமாகும். நல்லவர்களின் நட்பை வளர்த்துக்கொள்ளுங்கள். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். குடும்பத்தின் பொருளாதார நிலை உயர்வடைய துவங்கும். எந்த ஒரு விஷயத்திலும் நன்கு ஆராய்ந்து செயல்படும் திறன் ஓங்கும். வீடு வாகன பராமரிப்பு செலவுகள் கூடும். சுக சௌகரியங்கள் நிறைந்து விளங்கும். வண்டி, வாகனங்களை புதிதாக வாங்க முடியும். தாய் வழி உறவினர்களின் ஆதரவு பெருகும். நல்லவர்களின் நட்பை வளர்த்துக்கொள்ள முடியும். முன்னோர்கள் இழந்த சொத்துக்களை மீட்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். நல்ல நண்பர்களின் சேர்க்கை கிட்டும். ஆன்மீகத்தில் ஆர்வம் கூடும். உறவினர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது. வீட்டில் சின்னச் சின்ன சண்டைகள் ஏற்படும். காதல், திருமண விசயங்களில் அவசரப்பட வேண்டாம். கடன் வாங்கவோ,கொடுக்கவோ வேண்டாம். முக்கிய முடிவுகளை எடுக்கும் போது அவசரப்படாமல் ஆலோசனை செய்து முடிவு செய்யவும். எதிலும் பொறுமை காப்பது நல்லது. நல்லவர்களின் தொடர்பை வளர்த்துக்கொள்ளுங்கள். மறைந்து கிடந்த திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். வீட்டுப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். உடன் பிறப்பு வகையில் செலவுகள் வரும். யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். தேவையற்ற விவகாரங்களில் தலையிட வேண்டாம். குடும்பத்தில் சுப காரியங்கள் சிறிது தாமதத்திற்கு பிறகு நல்ல படியாக நடைபெறும். குடும்பத்தினருடன் அனுசரித்துச் செல்வது நல்லது. கணவன் மனைவிடையே சண்டை, சச்சரவு வராமல் பார்த்துக்கொள்ளவும். தாய் வழி உறவுகளில் கருத்து வேறுபாடுகள் ஏற்படும், அனுசரித்து செல்லவும். சிலருக்கு வீடு மாறவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். பயணங்களால் நிறைய லாபம் இருக்கும். வெளிநாடு சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களும் வெற்றிகரமாக கை கொடுக்கும். உத்யோகத்தில் இடம் மாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு. உத்யோகத்தில் வேலைப்பளு அதிகரிக்கும். தொழில், வியாபாரம் விருத்தியடையும். கூட்டு தொழில், வியாபாரம் சிறப்பாக அமையும். மொத்தத்தில் இந்த குரு பெயர்ச்சி விட முயற்சியின் பேரில் வெற்றி பெரும் வகையில் அமையும்.
பரிகாரம் : ஆதவரற்ற மாணவனின் உயர்கல்விக்கு உதவுங்கள். வாழ்க்கை உயரும்
Astrology Predictions Written By :
" Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology).
Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831