MITHUNAM Guru Peyarchi Palan
மிதுன ராசி நேயர்களே, (மிதுன ராசிக்கு குரு ஏழாவது மற்றும் பத்தாவது வீட்டின் அதிபதியாகும்.) குரு உங்கள் ராசிக்கு 2ம் வீடான தன ஸ்தானத்திற்கு இடம் மாறுகிறார். இது வரை ஜென்ம ராசியில் இருந்து வந்த குரு பகவான் 26-05-2026 முதல் 2-ம் இடத்திற்கு செல்கிறார். 2ம் இடம் நிச்சயம் நல்லது செய்வர் என உறுதியாக நம்பலாம். 2-ம் இடம் இடத்தில் குரு பகவானின் செயல்பாடு மிகுந்த நற்பலனை தரும். அடுத்த ஒரு வருடம் காலத்தில் தடையில்லாத தன வரவின் காரணமாக பொருளாதார நிலை உச்ச கட்டத்தை எட்டும். குரு பகவான் ஜென்ம குருவாக இவ்வளவு காலம் இருந்தார் தற்போது அவர் 2ஆம் வீட்டிற்கு மாறுகிறார். குடும்ப ஸ்தானத்தில் குரு அமர்வதால், மகிழ்ச்சி கூடும். சந்தேகத்தால் பிரிந்திருந்த கணவன்-மனைவி ஒன்று சேருவர். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். மனக்கசப்பால் ஒதுங்கியிருந்த உறவினர்கள் வலிய வந்து உறவாடுவர். நோய்கள் குணமாகும். உற்சாகம், தோற்றப் பொலிவு கூடும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார், கெட்டவர்கள் யார் என்பதைப் புரிந்துகொள்வீர்கள். வீட்டில் மங்கள நிகழ்ச்சிகள் நடைபெறும். நல்ல குடும்பம் அமையும். குடும்பத்தில் பொறுப்புகளும், கடமைகளும் உண்டாகும். குடும்பத்தில் அமைதி நிலவும், வாக்கு வன்மை கூடும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். முக்கிய பிரமுகர்களின் நட்பு கிடைக்கும். புது எதிர்பாராத இடத்தில் இருந்து உதவிகள் கிடைக்கும். குடும்பத்துடன் உல்லாச பயணம் செல்லக்கூடிய நேரம். மனதில் உற்சாகம் ஏற்படும். தெய்வ பலம் கூடுதலாக கிடைக்கும். பண தட்டுப்பாடு குறைந்து, இடையூறுகள் ஓரளவு சீராகும். புதிய பாதையில் பயணித்து பொருளாதாரத்தை பெருக்கிக்கொள்ள முடியும். எடுத்த காரியங்களில் வெற்றி கிட்டும். கடன் தொந்தரவு ஓரளவு சீராகும். கொடுத்த கடன் திரும்ப வரும். அனாவசிய செலவுகளை குறைத்துக்கொள்ளவும். குடும்பத்தில் சிக்கனத்தை கடைப்பிடிக்கவும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், நிம்மதியும் நிலவும். திருமண தடை நீங்கும். பழைய நேர்த்தி கடனை நிறைவேற்ற முடியும். நீண்ட நாள் பிரச்சனைகள், குடும்ப விரோதங்கள் தீரும். அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ள வேண்டிவரும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்திருந்த கணவன் மனைவி ஒன்று சேர வாய்ப்புண்டு. வண்டி, வாகன பராமரிப்பு செலவு அதிகமாகும். தடைப்பட்ட வீடு கட்டும் மீண்டும் தொடங்க வங்கிக் கடனுதவி கிடைக்கும். சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். புதிய ஆடை ஆபரணங்களை வாங்க முடியும். குடும்பத்தில் இருந்த பல பிரச்சனைகள் நீங்கும். நீண்ட நாட்களாக போக நினைத்த பல புண்ணிய ஸ்தங்களுக்கு போக முடியும். உத்யோகத்தில் பல சலுகைகள் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் நிறைய சாதிக்க முடியும். தொழில், வியாபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும். இந்த குரு பெயர்ச்சி மூலம் எல்லாம் நன்மைகளையும் பெற முடியும் என்று உறுதியாக கூறலாம்.
பரிகாரம் : மனநலம் குன்றியவர்களுக்கு உதவுங்கள். துயரங்கள் நீங்கும்
Astrology Predictions Written By :
" Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology).
Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831