VIRUCHIKAM Guru Peyarchi Palan
விருச்சிக ராசி நேயர்களே, (விருச்சிக ராசிக்கு குரு இரண்டாவது மற்றும் ஐந்தாவது வீட்டின் அதிபதியாகும்.) குரு உங்கள் ராசிக்கு 9ம் இடமான பாக்கிய ஸ்தானத்திற்கு இடம் மாறுகிறார். இது வரை உங்கள் ராசிக்கு 8ல் இருந்து வந்த குருபகவான் 26-05-2026 முதல் 9-ம் இடத்திற்கு செல்கிறார். உங்கள் ராசியை குரு பார்ப்பதால் சிறப்பான பலன்களை எதிர்பார்க்கலாம். ஓடிப் போனவனுக்கு ஓன்பதில் குரு என்பர். பாக்கிய வீடான 9 ஆம் வீட்டில் நுழைய போகும் குருவால் புது வியூகங்களை அமைக்க முடியும். நீங்கள் தொட்டது துலங்கும். எங்கு சென்றாலும் நல்ல மரியாதை கிடைக்கும். எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். தந்தை வழிச் சொத்துகள் வந்து சேரும். குடும்பத்தில் சண்டை, சச்சரவுகளுக்கு தீர்வு கிடைக்கும். தடைப்பட்டிருந்த சுப நிகழ்ச்சிகள் கை கூடி வரும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். வாழ்க்கைத்துணை வழியில் ஆதரவும், அவர்களால் நன்மையையும் உண்டாகும். பிள்ளைகளின் திருமணத்தை சிறப்பாக நடத்த முடியும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். வங்கியிலிருந்த நகை, பத்திரத்தை மீட்க முடியும். வீடு வாங்கும் ஆசை நிறைவேறும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும். குடும்பத்தில் பண பிரச்சனைகள் பெரியளவில் இருக்காது. புதிய முயற்சிகள் பலிதமாகும். உடல் சோர்வு நீங்கி உற்சாகத்துடன் செயல் பட முடியும். கடினமான வேலைகளையும் எளிதாக செய்து முடிக்க முடியும். குல தெய்வ வழிபாடு குலத்தை காக்கும். தெய்வத்தின் அருளால் எல்லா காரியத்திலும் எளிதில் வெற்றி பெற முடியும். வருமானம் தானாக உயரும். குடும்பத்தில் குதூகலம் உண்டு. குடும்பத்தாரின் அரவணைப்பை பெற முடியும். விலகி நின்ற சொந்தங்கள் மீண்டும் வந்து உங்களிடம் சேருவர். மனதில் நினைத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிக்க முடியும். பல வருடங்களாக தடைப்பட்ட திருமணம் உறவினர்களின் ஒத்துழைப்பால் கைகூடி வரும். கையில் எடுத்த காரியங்கள் வெற்றி பெறும். குடும்பத்தில் உங்கள் யோசனைகள் ஏற்கப்படும். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். மாற்றங்கள் ஏற்றங்களை தரும். உங்களுக்கு முன்னேற்றமும் வளர்ச்சியும் யோகமும் வந்து சேரும். உங்கள் ஆற்றலையும், திறமையும் கண்டு மற்றவர்கள் வியப்படைவர். உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உங்களிம் முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். தைரியமாக எல்லா காரியங்களிலும் இறங்கி வெற்றி பெறலாம். தைரியத்தையும், தன்னம்பிக்கை தந்து வளமான வாழ்வு உண்டு. பேச்சில் கனிவு பிறக்கும். முடியாத காரியங்களையும் முடித்துக் காட்டுவீர்கள். நீண்ட நாள் திட்டங்கள் நிறைவேறும். சொத்து பிரச்சனைகள் தீர்க்க படும். சொந்த வீடு கனவு நினைவாகும். எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். கணவன் மனைவி ஒற்றுமை பலப்படும். உறவினர்களிடம் ஏற்பட்ட விரோதம் மறையும். குடும்ப பெரியோர்களின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். குடும்பத்துடன் ஆன்மீக பயணம் ம் செல்ல விருப்பம் ஏற்படும். உத்யோகத்தில் பெயர், புகழ் கிடைக்கும். தொழில், வியபாரத்தில் இருந்த தடைகள் நீங்கும். இந்த குரு பெயர்ச்சியில் பாக்கிய ஸ்தானத்திற்கு வரும் குருவால் அபரிதமான பலன்களை நிச்சயம் எதிர்பார்க்கலாம்
பரிகாரம்: வாரிசு இல்லாதவர்களுக்கு உதவுங்கள். வளம் பெருகும்.
Astrology Predictions Written By :
" Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology).
Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831