KANNI
கன்னி ராசி நேயர்களே, இந்த மாதம் மிகவும் சிறப்பாக இருக்கும். உங்கள் வாழ்க்கையின் பல விஷயங்களில் வளர்ச்சியை எதிர்பார்க்கலாம். மேலும் நிலையான ஒரு முன்னேற்றத்தை விரைவில் எதிர்பார்க்கலாம். குடும்ப சூழலிலும் பதட்டமான சூழ்நிலைகளை உருவாக்கலாம். இந்த பதட்டமான தருணங்கள் உங்களை மன அழுத்தத்திற்கு ஆளாக்கும். உங்கள் பேச்சில் இனிமை கூடும். உடல் சோர்வு, உடல் சோர்வு அசதி வந்து நீங்கும். உங்கள் கடுமையான முயற்சிக்கு நல்ல பலன் கிடைக்கும். ஆன்மீகம் சார்ந்த விஷயங்களில் ஆர்வம் கூடும். கூடும், இது உங்கள் மனதை அமைதிப்படுத்தும். பொருளாதார நிலையில் உயர்வு உண்டு. எடுக்கும் முயற்சிகளில் தடைகள் இருந்தாலும் விடாமுயற்சியால் வெற்றி கிட்டும். தாயால் அனுகூலமான விஷயங்கள் நடக்கும். வீடு, வாகனம் சொத்து தொடர்பான விஷயங்கள் சாதகமாக அமையும். எதிரிகள் பலம் குறையும். கணவன் மனைவிடையே பனிப்போர் ஏற்படும். வாகன பயணங்களில் கவனம் தேவை. அடுத்தவர்களுக்கு உதவி செய்யப் போய் உபத்திரவத்தில் சிக்கிக் கொள்ள வேண்டாம். தந்தை உறுதுணையாக இருப்பார். யாரையும் குறை சொல்ல வேண்டாம். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். திருமண முயற்சிகளில் சிறு பிரச்னைகள் ஏற்பட்டு, அதன் பின்பு, வரன் அமையும். சிலருக்கு வீடு மாற்றம் ஏற்படுவதற்கும் சாத்தியக்கூறு உள்ளது. குடும்பத்தில் சுபச் செலவுகள் சற்று அதிகமாகவே இருப்பினும், அதை சமாளித்துவிட முடியும்.
சந்திராஷ்டமம் : 25,26,27 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்.
Astrology Predictions Written By :
" Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology).
Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831 Email: alandurastrologer@gmail.com