கடக ராசி அன்பர்களே, இந்த மாதம் நீங்கள் செய்ய போகும் காரியத்தில் நன்மை உண்டாகும். உங்கள் புத்தி சாதுரியத்தால் பல காரியங்களை செய்ய முடியும். எந்த ஒரு கஷ்டத்தையும் தாங்கி கொள்ள கூடிய சகிப்பு தன்மை உங்களிடம் அதிகமாகவே இருக்கும். சுபகாரியங்களுக்கான முயற்சியில் தாமத பலன் ஏற்படும். கணவன் மனைவிக்கிடையே மகிழ்ச்சி நீடிக்கும். உடல் நலத்தில் கவனம் தேவை. எதிர்பாராத வகையில் செலவுகள் ஏற்பட்டாலும் அதை திறமையாக சமாளிக்க முடியும். அசையும், அசைய சொத்துக்களால் வீண் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். குடும்ப தேவைகள் அனைத்தும் தடையின்றி பூர்த்தியாகும். கொடுக்கல், வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி நல்ல லாபத்தை பெற இயலும். குடும்பத்தில் சலசலப்புகள் நீங்கி கலகலப்பு ஏற்படும். பெரியோர்களிடமிருந்து ஆதாயங்களும் ஆதரவும் கிடைக்கும். குடும்ப வருமானத்தில் நல்ல ஒரு முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாம். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். உங்களைச் சுற்றியுள்ளவர்களுக்கு தான தர்மம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் வரும். உத்யோகத்தில் பல சலுகைகள் கிடைக்கும். தொழில், வியபாரத்தில் இருந்து வந்த சிக்கல்கள் குறையும்.
சந்திராஷ்டமம் : 20,21,22 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்.
Astrology Predictions Written By :
" Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology).
Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831 Email: alandurastrologer@gmail.com