கும்ப ராசி நேயர்களே, இந்த மாதம் குடும்பத்திற்கு நன்மை தரக்கூடிய விஷயங்கள் நடக்கும். பெரிய மனிதர்களின் நட்பும் அவர்களால் பல உதவிகளும் கிடைக்கும். வெளிவட்டார பழக்கங்கள் விரிவடையும். உங்கள் ஆசைகள் ஒவொன்றாக நிறைவேறும். நேர்முக, மறைமுக எதிர்ப்புகள் மறையும். மனதில் எப்போதும் இருந்து வரும் பதற்றம், பயம் ஆகியவற்றை இதன் மூலம் மறந்து நிம்மதியைக் காண முடியும். குடும்பத்தில் குழப்பங்கள் ஏற்படும், எனினும் அதை சாமர்த்தியமாக சமாளிக்க முடியும். அக்கம் பக்கம் உள்ளவர்களின் ஆதரவு பெருகும். குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு எந்த குறையும் இருக்காது. கணவன் மனைவிக்குள் நல்ல புரிதல் இருக்கும். சுப நிகழ்ச்சிகளின் தொடர்பாக அலைச்சல், செலவுகள் ஏற்பட்டாலும், மனத்திருப்தி கொள்ளும் வகையில் நற்பலன் உண்டாகும். வேலையின்றி இருப்பவர்கள் அதிக முயற்சி செய்தால் நல்ல வேலை கிடைக்க வாய்ப்புள்ளது. தொழில், வியாபாரத்தில் மேற்கொள்ளும் திட்டங்கள் நல்ல லாபத்தை கொடுக்கும்.
சந்திராஷ்டமம் : 25,26,27 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்.
Astrology Predictions Written By :
" Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology).
Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831 Email: alandurastrologer@gmail.com