மகர ராசி நேயர்களே, இந்த மாதம் குடும்பத்தில் பல புதுமையான விஷயங்களை செய்ய முடியும். உங்கள் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். உடல் நலனும், உள்ள நலனும் கூடும். உங்கள் உழைப்புக்கு ஏற்ற மரியாதையும், பலனும் கிடைக்கும். குடும்ப நலனில் அதிகம் அக்கறைகொள்ளவும். மருத்துவ செலவுகள் கட்டுக்குள் இருக்கும். மறைமுக எதிர்ப்புகள் வராமல் பார்த்துக்கொள்ளவும். உற்றார் உறவினர்கள் உதவிகரமாக இருப்பர். எதிர்பார்த்த நல்ல செய்தி உங்களை வந்தடையும். ஒரு சிலர் புது வீட்டிற்கு மாறும் சூழ்நிலை உருவாகும்.புதிய வண்டி வாகனங்கள் வாங்க வாய்ப்புண்டு. கணவன் மனைவிக்குள் பரஸ்பர ஒற்றுமை நிலவி வரும். ஆன்மீகத்தால் மனதில் அமைதி ஏற்படும். ஆன்மீக பெரியோர்களின் அறிமுகமும் ஆதரவும் கிடைக்கும். எந்த முயற்சிகளிலும் தடையும், தாக்கங்களும் ஏற்பட வாய்ப்புண்டு. யாருக்கும் எந்த காரணத்தை கொண்டும் வாக்குறுதி தர வேண்டாம். உத்யோகத்தில் நல்லதோர் முன்னேற்றம் காணலாம். வியபாரத்தில் புது முதலீடுகளை தாராளமாக மேற்கொள்ளலாம்.
சந்திராஷ்டமம் : 23,24,25 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்.
Astrology Predictions Written By :
" Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology).
Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831 Email: alandurastrologer@gmail.com