மீன ராசி நேயர்களே, இந்த மாதம் நினைத்த காரியத்தை சாதிக்க வேண்டும் என்ற எண்ணமும் வேகமும் அதிகமாக இருக்கும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். மனதில் துணிவும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். மனக்கவலைகள் படிப்படியாக குறையும். கோப தாபங்களை குறைத்து கொண்டு பிறரிடம் அனுசரித்து சென்றால் மட்டுமே வாழ்க்கையில் பெரியதொரு முன்னேற்றத்தை அடையமுடியும். குடும்பத்தின் மேலும் கொஞ்சம் அக்கறை எடுத்துக்கொண்டால் நன்றாக இருக்கும். மனதை அழுத்திக் கொண்டுருந்த பல பிரச்சனைகள் விலகும். புதியவர்களின் நட்பு ஏற்படும். ஒரு சிலருக்கு புது வீட்டிற்கு குடிபெயரும் வாய்ப்பு உண்டாகும். நண்பர்களிடம் ஏற்பட்ட விரோதங்கள் மறையும். உடல் ஆரோக்கியம் சிறப்படையும். தெய்வ அனுக்கிரகமும் எதிர்பாராத அதிர்ஷ்டமும் உண்டு. சிலருக்கு வெளிநாடு சென்று வரும் வாய்ப்பு அமையும். உங்கள் பேச்சு திறமையும், பெருந்தன்மையும் பார்த்து மற்றவர்கள் அசந்து போவர். உத்யோகத்தில் மேல் அதிகாரிகளிடம் நல்லுறவு ஏற்படும். தொழில், வியாபாரத்தில் படிப்படியாக வளர்ச்சி காணப்படும்.
சந்திராஷ்டமம் : 27,28,29,30 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்.
Astrology Predictions Written By :
" Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology).
Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831 Email: alandurastrologer@gmail.com