மேஷ ராசி அன்பர்களே, இந்த மாதம் கலவையான பலன்களைத் எதிர்பார்க்கலாம். குடும்ப உறுப்பினர்கள் உங்கள் ஆலோசனையை ஏற்பர். பண வரவு நன்றாகவே இருக்கும். இருப்பினும் செலவுகளை கட்டுப்படுத்தவும். குடும்ப விஷயங்களில் ஈகோவை வளர்த்துக் கொள்ள வேண்டாம். உடல்நிலையில் சில ஏற்ற இறக்கங்களை நீங்கள் காணலாம். நீங்கள் திட்டமிட்ட செயல்கள் விரைவாக நடைபெறும். பொது காரியங்களில் ஈடுபடும் வாய்ப்பு கிட்டும். இதுவரை இருந்து வந்த அலைச்சல்,டென்ஷன் குறையும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் எல்லாம் திட்டமிட்டபடி நடைபெறும். உறவினர்களுடன் ஏற்பட்ட மனக்கசப்புகள் நீங்கும். தெய்விக பணிகளில் ஈடுபாடு உண்டாகும். உடன்பிறந்தவர்களுடனான உறவுகள் நல்ல விதமாக இருக்கும். பெரிய மனிதர்களின் தொடர்பு கிட்டும். அடுத்தவர் விவகாரங்களில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. குடியிருக்கும் வீட்டை மாற்ற வேண்டிய சூழல் ஏற்படும். பூர்விக சொத்துக்களால் ஓரளவுக்கு ஆதாயங்கள் உண்டு. வண்டி, வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டு. குடும்ப விஷயங்களில் நல்ல பலன்களைப் பெறலாம். உங்களை சுற்றி இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் எந்த ஒரு இக்கட்டான சூழ்நிலையையும் சமாளித்து வெற்றி காண முடியும். தொழில், வியாபாரம் சீரான பாதையில் செல்லும். .
சந்திராஷ்டமம் : 13,14,15 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்.
Astrology Predictions Written By :
" Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology).
Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831 Email: alandurastrologer@gmail.com