MITHUNAM
மிதுன ராசி அன்பர்களே, இந்த மாதம் பலன்படி, பல நேர்மறையான பலன்கள் கிடைக்கும் மாதமாக இருக்கும். பொருளாதார ரீதியாக நல்ல ஆதாயமும், பணவரவும் இருக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் இணக்கமான சூழல் நிலவும். புதிய முயற்சிகளில் ஆர்வம் கூடும். கடின உழைப்புக்குக்கு ஏற்ற ஊதியம் கிடைக்கும். வரவுகள் சீராக இருக்கும், என்றாலும் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். நவம்பர் 14-க்குப் பிறகு நிதிநிலைமையில் படிப்படியான முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் அனுசரித்து போவது நல்லது. கணவன் மனைவிக்கிடையே சிறுசிறு புரிதல்கள் ஏற்படலாம். ஒரு சில உடல் உபாதைகள் வரக்கூடும் என்பதால் உடல்நலத்தில் கவனம் செலுத்துவது முக்கியம். சீரான உணவுப்பழக்கமும், லேசான உடற்பயிற்சியும் நன்மை தரும். உங்களுக்கு சம்பந்தமில்லாத பிரச்னைகளில் தலையிடாமல் இருப்பது நல்லது. வீடு வாகனம் சொத்து தொடர்பான விஷயங்கள் சாதகமாக அமையும். பெற்றோர்கள் நலனில் அக்கறைகொள்ளவும். எதையும் தீர யோசித்து முடிவு எடுப்பது நன்மை தரும். சிக்கலான விஷயங்களை கூட சர்வ சாதாரணமாக கையாள முடியும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் சின்ன சின்ன சண்டைகள் உண்டாகலாம். பயணங்களால் வீண் அலைச்சல் ஏற்படலாம். குடும்ப விவகாரத்தில் அவசரம் காட்டாமல் நிதானமாக செயல்படவும். பூர்வீக சொத்து விஷயங்களை கவனமாக கையாள்வது நல்லது. நீண்ட நாள் பிரார்த்தனை நிறைவேறும். எதிரிகளால் பிரச்னைகள் வந்தாலும் சமாளிக்க முடியும். நெடுந்தூர பயணம் மேற்கொள்ள வேண்டி வரும். வாகனங்களில் செல்லும்போது கவனம் தேவை. உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு. தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.
சந்திராஷ்டமம் : 15,16,17 கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்
Astrology Predictions Written By :
" Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology).
Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831 Email: alandurastrologer@gmail.com