RISHABAM
ரிஷப ராசி அன்பர்களே, பொருளாதாரம், தொழில் மற்றும் குடும்ப வாழ்க்கையில் நற்பலன்களும் சில சவால்களும் நிறைந்த கலவையான மாதமாக இருக்கும். குடும்பத்தில் தேவையற்ற வாதங்களைத் தவிர்ப்பது நல்லது. பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். எதிர்பார்த்த பண வரவு கைக்கு வந்து சேரும். சுபச் செலவுகளும், வீட்டிற்குத் தேவையான ஆடம்பர பொருள்கள் வாங்குவது போன்றவைகளால் செலவுகள் உயரலாம். தேவையற்ற செலவுகளைக் கட்டுப்படுத்துவது நல்லது. குடும்பத்தினருடன் இருந்து வந்த மனஸ்தாபங்கள் மற்றும் குழப்பங்கள் விலகும். வீட்டில் திருமணம் போன்ற சுப நிகழ்வுகள் நடக்கும். மாத இறுதியில் ஒரு சில சிக்கல்கள் வரலாம் என்பதால் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. நீங்கள் எதிர்பார்த்தது ஒன்றும், நடப்பது ஒன்றுமாக இருக்கும். அக்கம் பக்கம் உள்ளவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் அனுகூலங்களை அடைய முடியும். எடுக்கும் முயற்சிகளில் ஒரு சில தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும். அண்டை, அயலாரின் உதவி கிடைக்கும். அடுத்தவர்களிடம் வம்பு, சண்டைக்கு போகாமல் இருப்பது நல்லது. உறவினர்களால் சில மனசஞ்சலங்கள் தோன்றி மறையும். உடல் நலத்தின் மேல் கவனம் செலுத்தவும். பொருள் விரயங்கள் ஏற்பட்டாலும் அது சுப விரயங்களாகவே இருக்கும். கணவன் மனைவியிடையே ஒற்றுமைக் குறைவு ஏற்படலாம். மனதில் ஒரு விதமான பதட்டம் இருக்கும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். அடுத்தவருக்கு ஜாமின் கொடுப்பதை தவிர்க்கவும். எதிர்ப்புகள் தானாக நீங்கும். புதிய வேலை வாய்ப்புகளும், உத்தியோகத்தில் உயர் பதவி அல்லது வெளிநாட்டுப் பயண யோகமும் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் கூடுதல் கவனம் தேவை.
சந்திராஷ்டமம் : 16,17,18 கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்
Astrology Predictions Written By :
" Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology).
Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831 Email: alandurastrologer@gmail.com