துலாம் ராசி அன்பர்களே, இந்த மாதம் குடும்ப வாழ்க்கையில் பல சுவாரசியங்கள் இருக்கும். அக்கம் பக்கம் உள்ளவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் பல அனுகூலங்களை அடைய முடியும். எடுக்கும் முயற்சிகளில் ஒரு சில தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும். எதையும் நிதானமாக கையாள்வது நல்லது. எதிர்மறை சிந்தனை தவிர்த்து நேர்மறை சிந்தனையை வளர்த்துக்கொள்ளவும். உஷ்ண சம்பந்தமான தொந்தரவு இருக்கும். குடும்ப சிக்கல்களால் மன நிம்மதி பாதிக்கப்படக்கூடும். உடன் பிறப்புகளிடம் சில மனஸ்தாபங்கள் வர வாய்ப்புள்ளது. விலை உயர்ந்த பொருட்களை கவனமாக கையாளுவும். பயணங்களின் போது உங்கள் உடமைகளை கவனமாக பார்த்துக்கொள்ளவும். வீடு, வாகனம் தொடர்பான செலவினங்கள் உண்டு. சொத்து விஷயங்கள் சாதகமாக அமையும். எதிரிகளால் பிரச்னை வந்து நீங்கும். குடும்பத் தேவைக்காக கடன் வாங்கும் சூழல் ஏற்படலாம். எதிர்பாராத தடைகளும், பிரச்னைகளும் உண்டு. வெளிநாடு செல்வதற்கான முயற்சிகள் கைகூடும். பல நாள் ஆசைகள், கனவுகள் நிறைவேறும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். அண்டை, அயலாரின் உதவி கிடைக்கும். கணவன்,மனைவிக்குள் இருந்த பகைமை நீங்கும். திருமண காரியம் விரைவில் கைகூடும். அடுத்தவர்களிடம் வம்பு, சண்டைக்கு போகாமல் இருப்பது நல்லது. உறவினர்களால் சில மனசஞ்சலங்கள் தோன்றி மறையும். பொருள் விரயங்கள் ஏற்பட்டாலும் அது சுப விரயங்களாகவே இருக்கும். குடும்பத்தில் எதிர்பார்த்த காரியங்கள் நடக்கும். யாரும் ஜாமின் கையெழுத்து போட வேண்டாம். உத்யோகத்தில் இருந்த நெருக்கடிகள் குறையும். தொழில், வியாபாரத்தில் இருந்த போட்டி குறையும்.
சந்திராஷ்டமம் : 10,11,12 கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்
Astrology Predictions Written By :
" Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology).
Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831 Email: alandurastrologer@gmail.com