VIRUCHIKAM
விருச்சிக ராசி அன்பர்களே, இந்த மாதம் பலன்படி, பொருளாதார நிலை உயரும். உங்கள் அனுபவ அறிவை வெளிபடுத்தும் வாய்ப்புகள். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பணப் பரிவர்த்தனைகளில் கூடுதல் கவனம் தேவை. குடும்ப விவகாரங்களில் நிதானமும் பேச்சில் கவனமும் தேவை. திருமணமாகாதவர்களுக்கு மாத இறுதியில் நல்ல வரன் அமைய வாய்ப்புள்ளது. மன அழுத்தம் போன்ற சிறு ஆரோக்கியக் குறைபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. மனதைக் குழப்பிக் கொள்ளாமல் தியானம், யோகா செய்வது நல்லது. புத்துணர்ச்சியும் செயலில் வேகமும் பிறக்கும். எதிலும் அவசர முடிவுகளை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் வீண் செலவுகளை குறைத்துக் கொள்ளவும். வெளியில் எதிர்பார்த்த வங்கி கடன் கிடைக்கும். பயணங்களின் போதும், வாகனத்தில் செல்லும் போதும் கவனமாக இருக்கவும். தேக நலனில் கவனம் தேவை. கணவன் மனைவிக்குள் நல்ல புரிதல் இருக்கும். குடும்பத்தில் சாதகமான சூழல் நிலவும். எதிர்காலம் பற்றிய கவலை இருக்கும். வீடு, வாகனம் தொடர்பாக சில செலவினங்கள் வரும். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். பழைய வீட்டை புதுப்பிக்கவோ அல்லது வீடு மாறி செல்லவோ வேண்டியிருக்கும். சொந்த பந்தங்களின் வருகை இருக்கும். பெண்கள் வழியில் சில நன்மைகள் உண்டு. கணவன் மனைவிக்குள் இருந்த பகைமை மாறும். குடும்பத்தில் சில மருத்துவ செலவுகள் வரும். திட்டமிட்ட பயணங்கள் சிறப்பாக அமையும். வழக்கு விவகாரங்களை தள்ளிப்போடுவது நன்மை தரும். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும்.
சந்திராஷ்டமம் : 26,27,28 கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்
Astrology Predictions Written By :
" Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology).
Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831 Email: alandurastrologer@gmail.com