DANUSU Ragu Kethu Peyarchi Palan
தனுசு ராசி நேயர்களே : 26.4.2025 அன்று ராகு பகவான் தைரிய ஸ்தானத்திற்கும் - கேது பகவான் பாக்கிய ஸ்தானமான 9ம் இடத்திற்கும் இடம் மாறுகிறார்கள். நீங்கள் நினைத்தது நிறைவேறும் பெயர்ச்சியாக இது அமையும். இந்த பெயர்ச்சியில் சற்று கூடுதலான அலைச்சலை சந்திக்க வேண்டியிருக்கும். மனதினில் அவ்வப்போது விரக்தியான எண்ணங்கள் தோன்றும். எப்போதும் ஒரே மனநிலையுடன் இருக்க கற்றுக்கொள்ளவும். திட்டமிடாது செய்யும் காரியங்களில் வெற்றி கிடைக்கும். வீட்டிற்கு தேவையான விலையுயர்ந்த பொருட்களை வாங்க முடியும். குடும்ப வாழ்க்கையில் வளர்ச்சி உண்டாகத் தொடங்கும். வெளிநாட்டு யோகம் உண்டு.
பொது காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். உற்றார் உறவினர்கள் நேச கரம் நீட்டுவர். உடலில் இருந்த உபாதைகளும், மனக்குழப்பங்களும் விலகும். புதியவர்கள் நட்பும், ஒத்துழைப்பும் கிடைக்கும். சொத்துப் பிரச்சினைகளும் சுமுகமாக முடியும். புது நண்பர்களிடம் ஒரு அளவோடு வைத்துக்கொள்ளவும். நீங்கள் விரும்பியது கிடைக்காவிட்டாலும், கிடைத்ததை விரும்பினால் வெற்றி நிச்சயம். பணவரவு திருப்திகரமாக இருக்கும். தடைப்பட்ட திருமணம் போன்ற சுப காரியங்கள் தடை விலகி இனிதாக நடைபெறும். குழந்தை இல்லாதவர்களுக்கு விரைவில் புத்திர பாக்கியம் கிட்டும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். புதிதாக எடுத்த முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். பூர்விக சொத்துக்கள் மூலம் நல்ல லாபம் வரும். பெற்றோருடன் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்பு உண்டு. குடும்பப் பெரியவர்களின் உடல்நிலையில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். உடல்நிலையில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். கணவன் மனைவிடையே ஒற்றுமை பலப்படும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும்.
குடும்பத்தில் சுபிட்சமான நிலை உண்டாகும். பொருளாதார நிலை சீராக இருக்கும்.பொதுநல சேவைகள், தர்ம காரியங்கள், ஆன்மிகப் பணிகள் ஆகியவற்றில் முன்நின்று செயல்படும் வாய்ப்புகள் உருவாகும். ராகுபகவான் சஞ்சார நிலை மனதில் புது தைரியத்தினை உருவாக்கும். முக்கியமாக முடிவெடுக்க வேண்டிய தருணங்களில் அவசரம் காட்டாமல் பொறுமையாக உங்கள் காரியத்தை சாதித்துக்கொள்ளவும்.
எந்த சூழ்நிலையிலும் அவசரப்படாமல் நிதானம் காப்பது நல்லது. ராகு, மூன்றாவது ஸ்தானத்தில் அமர்வதால் உடன்பிறந்தோருடன் கருத்து வேறுபாடு, சொத்துப் பிரச்னைகள் வர வாய்ப்பு உண்டு. ராகு சற்று சிரமத்தைத் தந்தாலும் பண வரவை ஏற்படுத்தி பொருளாதார நிலையை உயர்த்துவார். ராகுவின் இடமாற்றம் உங்கள் மனதில் அசாத்தியமான தைரியத்தை இடம்பெறச் செய்யும். அடுத்தவர் செய்யத் தயங்கும் காரியத்தினை எவ்வித தயக்கமுமின்றி சாதாரணமாகச் செய்து முடிக்க முடியும்.
உத்யோக ரீதியாக எதிர்பாராத இடமாற்றத்தினை சந்திக்க நேரலாம். வெளிநாட்டுப் பணிகளுக்காகக் காத்திருப்போருக்கு அதற்கான வாய்ப்புகள் தேடிவரும். உத்யோகத்தில் உயர்வான நிலை ஏற்படும். ஒருசிலருக்கு தொழில் காரணமாக குடும்பத்தினரை விட்டுப் பிரிந்திருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். வெளியூர், வெளிநாட்டு தொடர்புடைய வாய்ப்புகளும் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் நல்ல லாபம் வரும்.
இந்த ராகு - கேது பெயர்ச்சியில் நிலுவையில் இருந்து வரும் குலதெய்வ வழிபாடு, நீண்ட நாள் பிராத்தனையை நிறைவேற்றுவது போன்றவற்றை இந்த வருடத்தில் செய்து முடிப்பது சிறப்பு.
Astrology Predictions Written By :
" Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology).
Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831