KATAKAM Ragu Kethu Peyarchi Palan
கடக ராசி நேயர்களே : 26.4.2025 அன்று ராகு பகவான் அஷ்டம ஸ்தானத்திற்கும் - கேது பகவான் குடும்ப ஸ்தானத்திற்கும் மாறுகிறார்கள். பொதுவாக ராகு தான் அமருகின்ற ஸ்தானத்தின் பலத்தினை உயர்த்தும் வகையில் பலன்களைத் தருவார், கேது அதற்கு நேர்மாறாக தான் இடம்பெறும் ஸ்தானத்தின் பலத்தினைக் குறைத்து பலன்களை உண்டாக்குவார். தன ஸ்தானத்திற்கு கேது வரவிருப்பதால் பொருள்வரவு தடைபடும். விரய ஸ்தானத்திற்கு ராகு இடம்பெயர இருப்பதால் அநாவசியச் செலவுகள் அதிகமாகும். இதனால் பொருளாதார ரீதியாக சற்று சிரமத்தினைக் காண நேரிடும்.
உங்கள் எண்ணங்களை தைரியமாக வெளிப்படுத்த முடியும். தேவையற்ற செலவுகளைக் குறைத்து சேமிப்பில் கவனம் செலுத்துவது நல்லது. சமூகத்தில் உயர்ந்தவர்களின் நட்பு கிடைக்கும். உடல் உபாதைகள் நீங்கும். குடும்ப உறுப்பினர்களால் அவ்வப்போது சிறுசிறு பிரச்னைகளை சந்திக்க நேரிடும். குடும்ப உறுப்பினர்களுடன் சில கருத்து வேறுபாடு உருவாகக்கூடும். அடுத்தவர்களிடம் பேசும் போது வார்த்தைகளை அளந்து பேசவும். குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பணவரவுகள் தேவைக்கு ஏற்றபடி இருக்கும். சொந்த வீடு வாங்கும் யோகமும் அதனால் கடன்களும் உண்டாகும். உற்றார், உறவினர்கள் ஓரளவுக்கு அனுகூலமாக செயல்படுவர். வெளிவட்டார தொடர்புகள் விரிவடையும்.
பொது காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. உடல் ஆரோக்கிய விஷயத்தில் கவனம் தேவை. எதிர்பாராத வீண் செலவுகள் உண்டாகும். முடிந்தவரை ஆடம்பர செலவுகளை குறைத்துக்கொள்ளவும். கணவன் மனைவிடையே நல்ல புரிதல் இருக்கும்.
குடும்ப பிரச்சனைகளை வெளியில் யாரிடத்திலும் சொல்லாமல் இருப்பது நல்லது. தாய்வழி உறவினர்கள், உடன்பிறப்புகளால் பிரச்னைகள் தோன்றலாம். எந்தவொரு பிரச்னைக்கும் பொறுமை காப்பதால் மட்டுமே தீர்வு காண முடியும். 8ம் இடத்து ராகுவினால் உடல்நிலை ரீதியாக சிறிது சிரமத்தினை சந்திக்கக்கூடும்.
எதிலும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம். உடல் உஷ்ணம் சம்பந்தப்பட்ட தொல்லைகள் இருப்பதால் கவனத்துடன் இருப்பது நல்லது. உங்களது உடைமைகளை கவனமாக பார்த்துக்கொள்ளவும். கொடுத்த வாக்கினைக் காப்பாற்றுவது சிரமம். எந்த ஒரு விஷயத்தையும் ஒருமுறைக்கு இருமுறை ஆராய்ந்து பேசுவது நல்லது. இந்த ராகு கேது பெயர்ச்சி உங்கள் பொருளாதார நிலையை சற்றே அசைத்துப் பார்க்கும். செலவுகளை சமாளிக்க சற்று சிரமப்பட வேண்டியிருக்கும்.
பழைய சொத்து ஒன்றினை விற்க வேண்டிய சூழல் வரும். குடும்ப உறுப்பினர்கள் உங்கள் முயற்சிக்கு ஒத்துழைக்க மறுப்பர். விலையுள்ள பொருட்களை வாங்குவதில் சற்று கவனம் தேவை. எந்த ஒரு விஷயத்திலும் தனித்து முடிவெடுக்காமல் பல பேரின் ஆலோசனைகளையும் கருத்தில் கொள்வது நல்லது.
ஏதேனும் ஒரு வகையில் தொடரும் பொருள்வரவு உங்களைக் காப்பாற்றும். அநாவசிய பிரச்னைகள் நம்மை நாடி வரும் நேரம் இது என்பதால் இன்னும் ஒன்றரை ஆண்டு காலத்திற்கு வீண் வாக்குவாதம், தேவையற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துதல் ஆகியவற்றை கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.
உத்யோகத்தில் வரும் பிரச்சனைகளை எதிர்கொள்ளும் துணிவு இருக்கும். உங்கள் திறமைக்குகேற்ற உத்யோகம் கிடைக்கும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் புதிய முயற்சிகளில் கவனமுடன் செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் யாரையும் நம்ப வேண்டாம்.
ராகு கேது பெயர்ச்சியானது உங்கள் ராசிக்கு சுமாரான பலன்களையே தருவார்கள் என்பதால் ராகு- கேது பெயர்ச்சி நாளன்று ஆலயத்திற்கு சென்று சிறப்பு அர்ச்சனை செய்துகொள்வது நல்லது.
Astrology Predictions Written By :
" Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology).
Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831