MITHUNAM Ragu Kethu Peyarchi Palan
மிதுன ராசி நேயர்களே : 26.4.2025 அன்று ராகு பகவான் பாக்கிய ஸ்தானத்திற்கும் - கேது பகவான் தைரிய ஸ்தானத்திற்கும் மாறுகிறார்கள். இந்த பெயர்ச்சி உங்களுக்கு நற்பலன்களைத் தரும் வகையில் அமையும். 3ம் இடத்தில் அமரும் கேதுவின் அருளால் எந்த ஒரு விஷயத்தையும் ஒருமுறைக்கு இருமுறை ஆராயும் மனப்பக்குவம் தோன்றும். மனதில் நினைத்த காரியத்தை உடனே செயல்படுத்த முடியும். கேதுவின் 3-ம் இடத்துச் சஞ்சாரம் உடன்பிறந்தோருடன் சின்ன கருத்து வேறுபாட்டினைத் ஏற்படுத்தும். உங்களது செயல்கள் அடுத்தவர் பொறாமை படும்படி இருக்கும். உங்கள் உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைக்கும். புதிய வண்டி வாகனங்களை வாங்க முடியும். எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். யாரும் கேட்காமல் அறிவுரைகள் கூற வேண்டாம்.
மனதில் புது தெம்பு பிறக்கும். சமூக அந்தஸ்து உள்ளவர்களின் தொடர்பு கிட்டும். கடினமான வேலைகளையும் சரியாக முடித்து உங்களின் திறமைகளை வெளிப்படுத்த முடியும். குடும்பத்தில் சுப காரியங்களில் ஏற்பட்ட தடைகள் விலகும். சுக வாழ்வு அமையும். சொந்தமாக வீடு, வாகனம் வாங்க கூடிய யோகம் அமையும். எடுத்த காரியத்தில் வெற்றி மேல் வெற்றி கிட்டும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்லவும். பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது முக்கியம். பண வரவு தாராளமாக இருப்பதால் பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். பண விஷயமாக எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும்.
மறைமுக எதிரிகள் காணாமல் போவர். உங்களை சுற்றி இருப்பவர்களிடம் சற்று கவனமாக இருப்பது நல்லது. குடும்பப் பெரியவர்களின் விருப்பத்தினை நிறைவேற்ற முடியும். பூர்வீக சொத்துகளில் இருந்து வந்த பிரச்னைகள் விலகும். குடும்பத்தில் நடைபெறும் விசேஷங்களில் உங்களின் பங்களிப்பு முக்கியத்துவம் பெறும். முக்கியமான பணிகளுக்கு யாரையும் நம்பாமல் நீங்களே நேரடியாக காரியத்தில் இறங்குவது நல்லது. புதிய சொத்து வாங்க முயற்சிப்போருக்கு கால நேரம் கூடிவரும். விலகியிருந்த உறவினர்கள் நெருங்கி வருவர்.
ராகு 9ம் இடத்தில் அமர்வது ஓரளவிற்கு முன்னேற்றத்தினைத் தரும். பெற்றோர் உடல்நிலையில் கவனம் செலுத்துவது அவசியம் ஆகிறது. 9ம் இடத்து ராகு அயல்நாட்டுப் பிரயாணத்திற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவார். வாகன பயணத்தின் கவனமாக இருக்கவும்.
உத்யோகத்தில் அந்தஸ்தும், கௌரவம் கிடைக்கும். வெளிநாடு சென்று பணிபுரியும் வாய்ப்பு கிட்டும். தொழில், வியாபாரம் அமோகமாக நடைபெறும். தொழில், வியாபாரத்தில் போட்டிகள் குறையும். சுயதொழில் செய்வோர் சிறப்பான தனலாபத்தினை அடைவர். தொழில், வியாபாரத்தில் உள்ள சூட்சமங்கள் புரியவரும்.
மொத்தத்தில் வருகின்ற ஒன்றரை வருட காலத்தில் அசையாச் சொத்துகள் அமைவதோடு உங்கள் வாழ்வியல் தரத்தை உயர்த்துகின்ற வகையில் இருக்கும்.
Astrology Predictions Written By :
" Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology).
Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831