கன்னி ராசி நேயர்களே : 26.4.2025 அன்று ராகு பகவான் சப்தம ஸ்தானத்திற்கும் - கேது பகவான் ஜென்ம ராசிக்கும் மாறுகிறார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். பணம் எதிர்பார்த்த அளவுக்கு வந்து கொண்டிருக்கும். புதிய சேமிப்புத் திட்டங்களில் ஈடுபாடு உண்டாகும். சிலர் புதிய வீடு வாங்கி கிரகப்பிரவேசம் செய்வர். கொடுத்த வாக்கை எப்பாடுபட்டாவது காப்பாற்ற முடியும். குடும்ப ரகசியங்களை காப்பாற்றுவது நல்லது. எதிர்பாராத நேரத்தில் திடீரென்று தோன்றும் தடைகள் உங்கள் முயற்சிகளின் வேகத்தினைக் குறைக்கும். எந்த ஒரு சிரமமான விஷயத்தைப் பற்றியும் அதிகம் கவலைப்படாமல் இருந்து வந்த நீங்கள் சிறுசிறு பிரச்னைகளுக்குக் கூட இந்த நேரத்தில் துவண்டு போகும் வாய்ப்பு உண்டு.
மனதில் நல்ல பல சிந்தனைகளும், எந்த ஒரு விஷயத்திலும் அதிக ஈடுபாடின்மையும் தோன்றும். இதனால் பல சமயங்களில் அடுத்தவர்களுக்காக விட்டுக் கொடுத்துச் போக வேண்டிவரும். குடும்பத்தில் சுப காரியங்கள் கைகூடும். கணவன் மனைவிடையே நெருக்கம் உண்டாகும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். உங்கள் முக்கிய தேவைகள் பூர்த்தியாகும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். சொந்த வீடு, மனை வாங்கும் யோகம் உண்டு. எதிர்பாராத வகையில் உதவி கிடைக்க பெற்று மேன்மை ஏற்படும். உடல் நலத்தில் சிறு சிறு தொந்தரவுகள் ஏற்பட்டு பின் சீராகும். உற்றார், உறவினர்களின் ஆதரவு மகிழ்ச்சி அளிக்கும்.
முன் பின் அறிமுகம் இல்லாதவர்களுக்கு ஜாமின் கொடுக்க வேண்டாம். வம்பு, வழக்குகளில் சற்று இழுபறி நிலை நீடிக்கும். குடும்ப விஷயங்களில் உண்டாகும் பிரச்னைகளை எளிதில் தீர்க்க வழி கிடைக்கும். உடன்பிறந்தோர் உங்களால் ஆதாயம் காண்பர். அதே நேரத்தில் வாழ்க்கைத்துணைவரின் செயல்பாடுகள் உங்களை வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்லும். குடும்ப விஷயங்களில் அவரது கருத்துக்களோடு ஒத்துப்போவது நல்லது. 7ம் இடத்து ராகுவினால் தொழில் முறையில் தூரத்து பிரயாணம் செல்லும் வாய்ப்பு உண்டு. செல்லும் இடங்களில் புதிய நண்பர்களின் சேர்க்கை உருவாகும். பெண்கள் விஷயத்தில் சற்று கவனமாக இருக்கவும்.
ராகுவின் சஞ்சார நிலை தேவையற்ற நட்பு வட்டாரத்தை ஏற்படுத்தும். அடுத்தவர்களின் சுபாவம் அறிந்து பழக வேண்டியது அவசியம். ஜென்ம ராசியில் வந்து அமர உள்ள கேது பகவான் விரக்தியான மனநிலையைத் தருவார். கடமையைச் செய்வதில் கண்ணும் கருத்துமாகச் செயல்பட வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியம். முன்னோர்களின் சொத்துகளில் புதிய பிரச்னைகளை சந்திக்க நேரலாம்.
உத்யோகத்தில் உங்கள் பணிகளை கவனமாக மேற்கொள்ளவும். உத்யோகத்தில் பதவி உயர்விற்கான வாய்ப்புகள் வந்து சேரும். பணி நிமித்தம் குடும்பத்தை விட்டுப் பிரிந்திருக்கும் வாய்ப்பும் உண்டாகலாம். வெளிநாட்டில் பணிபுரிவோர் தங்கள் பாதுகாப்பில் கவனம் கொள்ள வேண்டியது அவசியம். செய்யும் தொழிலில் தன லாபத்தினைக் பெற முடியும். கூட்டுத்தொழில்கள் லாபகரமாக அமையும்.
வரும் ஒன்றரை ஆண்டு காலமும் பெரிதாக பாதிப்புகள் ஏதும் நேராது என்றாலும் புதிய மனிதர்களிடம் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
Astrology Predictions Written By :
" Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology).
Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831