கும்ப ராசி நேயர்களே : 26.4.2025 அன்று ராகு பகவான் தன ஸ்தானத்திற்கும் - கேது பகவான் அஷ்டம ஸ்தானத்திற்கும் மாறுகிறார்கள். ராகு பகவான் தான் அமரும் இடத்தின் வலிமையைக் கூட்டுவார் என்ற கருத்தின்படி இரண்டாம் இடமாகிய தன ஸ்தானம் உச்ச வலிமையுடன் வரும் ஒன்றரை வருட காலமும் செயல்பட உள்ளது. இந்த பெயர்ச்சியால் உங்களுக்கு தேவையற்ற அலைச்சல் அதிகரிக்கும். உற்றார் உறவினர்கள் உங்கள் உயர்வாக எண்ணுவர். குடும்ப வருமானம் சீராக வந்து கொண்டிருந்தாலும் சில விரயங்களும் ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். சமூகத்தில் உங்கள் கவுரவம் கூடும். புதிய புதிய வாய்ப்புகளும் தேடி வந்து கொண்டிருக்கும். உங்கள் செயல் திட்டங்களை மாற்றி அமைத்து வெற்றி பெற முடியும். வீட்டில் சிறப்பான வாழ்க்கைச் சூழல் உண்டாகும். குடும்பத்தினருடன் சுற்றுலா சென்று வர முடியும். புது வீடு, வாகனம் ஆகியவற்றை வாங்க முடியும். பல்வேறு வழிகளில் பொருள்விரையம் ஏற்படும். இந்த நேரத்தினைப் பயன்படுத்திக்கொண்டு அவ்வப்போது சேமிப்பில் ஈடுபட்டு வருவது நல்லது. அசையாச் சொத்துகள் சேரும். குடும்பத்திற்குத் தேவையான பொருட்களை வாங்க முடியும்.
குடும்பத்தில் சலசலப்புகள் இருந்து வந்தாலும் கலகலப்பிற்குக் குறைவிருக்காது. இரண்டாம் இடத்து ராகுவினால் பேசும் வார்த்தைகளில் கடுமை வெளிப்படக்கூடும். பண வரவுகள் ஏற்ற இறக்கமாக இருக்கும். உடல் உஷ்ணத்தின் காரணமாக சரும நோய்கள் தோன்றும் வாய்ப்பு உள்ளது. ஆகையால் உடல் நலத்தில் அதிகம் கவனம் தேவை. குடும்பத்தில் எதிர்பாராத மருத்துவ செலவுகள் வரும். கணவன் மனைவிடையே வீண் வாக்கு வாதங்கள் வந்து போகும். உற்றார், உறவினர்களை அனுசரித்து செல்ல வேண்டியிருக்கும். சுப காரிய முயற்சிகளில் தாமத பலன் ஏற்படும். எதிர்பாராத வகையில் பண உதவி கிடைக்கும். குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். சொத்து வகையில் சில பிரச்சனைகளை சந்திக்க வேண்டிவரும். பூர்விக சொத்துக்களால் வீண் செலவுகளும், நெருக்கடிகளும் உண்டாகும். ஆடம்பர செலவுகளை குறைத்துக்கொள்ளவும். எதையும் சமாளிக்கும் திறமை உங்களிடம் இருக்கும்.
இதுநாள் வரை 9ம் இடத்தில் இருந்து வந்த கேது விலகுவதால் மனதில் இருந்து வந்த விரக்தியான எண்ணங்கள் அகலும். செய்ய வேண்டிய கடமைகளில் சிறிதும் தயக்கமின்றி சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். மனக் குழப்பங்கள் விலகும். அதேநேரத்தில் உங்கள் உடல்நிலையை கேது பகவான் சற்று சிரமத்தை ஏற்படுத்துவார். உடல்நிலையில் ஆரோக்யத்தைப் பராமரிக்க உணவுப் பழக்கத்தில் கட்டுப்பாட்டினை ஏற்படுத்திக் கொள்வது நல்லது.
அதேபோல கேதுவின் 8ம் இடத்து மாற்றம் வாழ்க்கைத் துணையுடன் அவ்வப்போது கருத்து வேறுபாட்டினைத் தோற்றுவிப்பதோடு அவரது உடல்நிலையிலும் சற்று சிரமத்தினைச் சந்திக்க வைப்பார். குடும்பத்தினரின் விருப்பங்களை நிறைவேற்ற போராட வேண்டிவரும். முடியும். குடும்பக் குழப்பங்கள் உங்கள் மன நிம்மதியைக் பாதிக்கும். அநாவசியச் செலவுகள் கட்டுப்படுத்தப்படும் அதே நேரத்தில் ஆன்மிகச் செலவுகளிலும், தான தருமங்களுக்காக அதிகம் செலவழிப்பீர்கள். குடும்பத்தில் நடக்கும் முக்கிய நிகழ்ச்சிகளில் முன்நின்று செயல்படுவீர்கள்.
எதிர்பாராத திடீர் செலவுகள் உண்டாகும். யாருக்கேனும் கடன் கொடுத்தால் அது திரும்ப வருவது சற்று கடினமே. யாரை நம்பியும் எந்தவிதமான செயலையும் இந்த வருடத்தில் ஒப்படைக்க இயலாது. சிறு காரியம் முதல் பெரியது வரை அனைத்துப் பணிகளுக்கும் நீங்களே நேரடியாக செயலில் இறங்க வேண்டியிருக்கும். அடுத்தவர்களை நம்பி ஒப்படைத்த செயல்களின் முடிவு உங்களுக்கு முழுமையான மன திருப்தியினைத் தராது.
உத்யோகத்தில் வேலை பளு அதிகரிக்கும். உத்யோகத்தில் உயர்வான நிலை உண்டாகும். உத்யோகத்தில் எதிர்பாராத இட மாற்றங்களால் அலைச்சல் உண்டாகும். தொழில், வியாபாரம் தொடர்பான பயணங்கள் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் அதிக கவனம் செலுத்தவும்.
மொத்தத்தில் இந்த ராகு கேது பெயர்ச்சியானது உங்களை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்லும் என்பதில் ஐயம் ஏதும் இல்லை.
Astrology Predictions Written By :
" Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology).
Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831