மீன ராசி நேயர்களே : 26.4.2025 அன்று ராகு பகவான் ஜென்ம ராசியிலும் - கேது பகவான் சப்தம ஸ்தானத்திற்கும் மாறுகிறார்கள். இந்த ராகு கேது பெயர்ச்சி உங்கள் வாழ்வியல் நிலையில் ஒரு சில மாறுதல்களை உண்டாக்கும். ராசியில் ராகு இணைவதால் மனதில் அநாவசியமான குழப்பம் உண்டாகும். வெளியில் பேசும்போது வார்த்தைகளை அளந்து பேசவும். உடல் ஆரோக்கியத்திலும் சிறு சிறு தொல்லைகள் வந்தாலும், மருத்துவச் சிகிச்சையால் அனைத்தும் சரியாகிவிடும். சில நேரங்களில் ஒரு கடனை அடைக்க மற்றொரு கடன் வாங்க வேண்டிவரும். வழக்குகளிலும் தீர்ப்பு வர தாமதமாகும். வாழ்க்கையில் நல்லது எது கெட்டது எது என்பதை அறிந்து நடக்கவும்.
சமூகத்திற்கு நன்மை தரும் நல்ல காரியங்களைச் செய்ய முடியும். உங்கள் செயல்பாடுகள் அடுத்தவர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தலாம். உறவினர்களால் ஒரு சில பிரச்சனைகள் வரக்கூடும். இந்த பெயர்ச்சியால் நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் தடை தாமதம் உண்டாகும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். கணவன் மனைவிடையே சிறிய கருத்து வேற்றுமை வரும். யாருக்கும் சாட்சி கையெழுத்து போட வேண்டாம். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு தொந்தரவுகள் ஏற்பட்டு பின் சீராகும். பூர்விக சொத்துக்களால் அனுகூல பலன்கள் ஏற்படும். எதிர்பாராத வகையில் சில உதவிகள் கிடைக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிட்டும்.
வெளியிடங்களில் பிரச்சனைகள் வராமல் இருக்க அமைதி காப்பது நல்லது. நீங்கள் நல்லது செய்யப் போனாலும் அது அடுத்தவர்களின் பார்வைக்கு தீயதாகவே தெரியும். இதனால் நீங்கள் செய்ய வேண்டிய கடமையைத் தவிர அடுத்தவர்களின் விவகாரங்களில் தலையிடுவதை தவிர்ப்பது அவசியம். ஜென்ம ராசியில் ராகு இணைவதால் உடலில் சிறு காயங்கள் தோன்றும் வாய்ப்பு உள்ளதால் சற்று எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. நினைத்தவற்றை எளிதாக அடைய பல குறுக்கு வழிகளை ராகு நம் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்துவார்.
7ம் இடத்தில் வந்து அமர உள்ள கேதுவினால் உண்டாகும் நன்மை சத்ரு நாசம் என்பதே. மறைமுக எதிரிகள் காணாமல் போவார்கள். வாழ்க்கைத்துணையின் கருத்துக்களைக் கேட்டு அதன்படி செயல்படுவதன் மூலம் வெற்றிகளைக் காண்பீர்கள். நண்பர்களுடன் அநாவசிய கருத்து வேறுபாடு தோன்றும். சற்று அதிகப்படியான அலைச்சலினால் உடல் அசதி ஏற்படும். குடும்பத்தினரோடு மனமகிழ்ச்சியுடன் செலவழிக்கும் நேரம் குறையும். ஒரு சிலருக்கு தூரதேசப் பிரயாணத்திற்கான வாய்ப்பு உண்டு. உடன் பிறந்தோரால் ஒரு சில உபத்திரவங்களை சந்திக்க நேரிடும். பூர்விக சொத்துகளில் சில பிரச்னைகள் வரக்கூடும்.
புதிய நபர்களை நம்பி எந்த விஷயத்திலும் இறங்கக் வேண்டாம். பெண்கள் சம்பந்தப்பட்ட விவகாரங்களில் கூடுதல் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. எதிர்கால நலன் கருதி பண சேமிப்பில் ஈடுபடுவது நல்லது. இன்றைய சூழலில் நீங்கள் அதிகம் பேசாது அமைதி காத்து வருவது நன்மை தரும்.
உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். உத்யோகத்தில் ஒரு சிலருக்கு எதிர்பாராத இட மாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு. தொழில், வியாபாரத்தில் முன்னேற்றமான நிலையே இருக்கும். தொழில், வியாபாரத்தில் பெரிய முதலீடுகளை தவிர்க்கவும்.
இந்த ராகு - கேது பெயர்ச்சி உங்களுக்கு நன்மை, தீமையும் கலந்த கலவையான பலன்களை தரும்.
Astrology Predictions Written By :
" Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology).
Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831