மிதுன ராசி நேயர்களே : 26.4.2025 அன்று ராகு பகவான் தொழில் ஸ்தானத்திற்கும் - கேது பகவான் சுக ஸ்தானத்திற்கும் மாறுகிறார்கள். இந்த பெயர்ச்சியில் நீங்கள் எடுக்க போகும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். பண வரவுகளில் சிறு சிறு நெருக்கடிகள் ஏற்பட்டாலும் எதிர்பாராத வகையில் உதவிகள் கிட்டும். குடும்பத்தில் சுப விரயங்கள் ஏற்படும். பண தேவைக்காக வெளியில் கடன் வாங்க வேண்டியிருக்கும். புதிய வீடுகளுக்கு மாறும் சூழ்நிலை உண்டாகும். பணவரவும் திருப்திகரமான நிலையிலேயே இருக்கும். உங்களின் திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் கிடைக்கும்.
உடல் ஆரோக்கியம் நல்ல முறையில் இருக்கும். மனதில் இருந்து வந்த குழப்பங்களும் மறையும். உற்றார் உறவினர்கள், சுற்றி இருப்பவர்கள் அனைவரும் அனுசரித்து நடந்து கொள்வர். பிரிந்து இருந்த குடும்பம் ஒன்று சேரும். குடும்பச் சூழலில் மகிழ்ச்சியான மாற்றங்களைக் காண முடியும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு புத்திர பாக்கியம் கிட்டும். திருமண முயற்சிகளில் சாதகமான பலன் கிட்டும். வெளிநாடு செல்லக் காத்திருப்போருக்கு இந்த வருடத்தில் வாய்ப்பு தேடி வரும். கணவன் மனைவிடையே ஈகோ பிரச்சனை வந்து போகும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. எதையும் சாமர்த்தியமாக சமாளிக்கும் மனபக்குவம் உங்களிடம் இருக்கும். மறைமுக எதிர்ப்புகள் தானாக விலகும். வம்பு வழக்குகளில் சாதகமான பலன் உண்டாகும். குடும்பத்தின் பொருளாதார நிலை சிறப்பாக இருந்தாலும் எதிர்பாராத சுப செலவுகள் ஏற்படும். வீண் விரயங்கள் அதிகரிக்கும்.
முன் கோபத்தை குறைப்பது எல்லா வகையிலும் நல்லது. கொடுத்த கடன்களை திரும்ப பெறுவதில் தடைகள் ஏற்படும். தேவையற்ற பிரச்சனைகளில் தலையிடாமல் இருப்பது நல்லது. குடியிருக்கும் வீட்டினில் சீரமைக்கும் வேலைகளை தாராளமாக மேற்கொள்ளலாம். குடும்பப் பெரியோர்களின் ஆசியும் கிட்டும். உடல்நிலையில் தீவிர கவனம் செலுத்த வேண்டியது அவசியம். இதுநாள் வரை 5ம் இடத்தில் இருந்து வந்த கேது விலகுவதால் மனதில் இருந்து வந்த ஒருவித சஞ்சலம் அகலும். நான்காம் இடத்தில் அமருகின்ற கேது பகவான் நல்ல செயல்அறிவினை வழங்குவார்.
பலவிதமான விஷயங்களை கற்றுக் கொள்ளும் வாய்ப்பு உருவாகும். எந்த ஒரு விஷயத்தையும் அலசி ஆராயும் மனப்பான்மை உங்களிடம் இருக்கும். நான்காம் இடத்துக் கேது துஷ்டர்களின் சேர்க்கையைத் தருவார். தாயாரின் உடல்நிலையில் கவனம் செலுத்துவது நல்லது. எதிர்பாராத நேரத்தில் தோன்றும் பிரச்னைகளை சமாளிக்கும் அறிவு திறன் உங்களிடம் இருக்கும். சொத்து, சுகம் சேருவதோடு வாழ்வியல் தரமும் உயர்வடையும்.
உத்யோகத்தில் சிறிதும் சம்பந்தமில்லாத காரியங்களில் ஈடுபட வேண்டாம். உத்யோகத்தில் பணிகளை சிறப்பாக செய்து முடிக்க முடியும். புதிதாக வேலை தேடுபவர்களுக்கு நல்ல இடத்தில் வேலை கிடைக்கும். வெளிநாடு செல்லக் காத்திருப்போருக்கு இந்த வருடத்தில் வாய்ப்பு தேடி வரும். தொழில் முறையில் பல்வேறு பணிகளில் ஈடுபட வேண்டியிருக்கும். தொழில், வியபாரத்தில் ஓரளவு சுமாரான லாபம் வரும்.
மொத்தத்தில் இந்த ராகு கேது பெயர்ச்சியினால் இதுவரை கண்டிராத புதிய அனுபவங்களைப் பெறுவதன் மூலம் வாழ்வின் அடுத்தபடிக்கு முன்னேற முடியும்.
Astrology Predictions Written By :
" Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology).
Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831