ரிஷபம் ராசி நேயர்களே : 26.4.2025 அன்று ராகு பகவான் லாப ஸ்தானத்திற்கும் - கேது பகவான் பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கும் மாறுகிறார்கள். இந்த ராகு கேது பெயர்ச்சி உங்கள் வாழ்வியல் நிலையில் பெரியளவில் மாற்றத்தினை உண்டாக்கும். மனதில் நற்சிந்தனைகளையும், நல்லெண்ணங்களையும் கேது அருள்வார். சாஸ்திர, சம்பிரதாயங்களில் அதிக ஈடுபாடு ஏற்படும். ஆன்மீக ஞானம் உண்டாகும். கேதுவின் துணையுடன் எந்த ஒரு விஷயத்தையும் ஒரு முறைக்கு இருமுறை ஆராயும் மனப்பக்குவம் தோன்றும். பொருளாதாரத்தில் வளர்ச்சி உண்டாகும். தெய்வ வழிபாட்டில் நாட்டம் அதிகரிக்கும். தள்ளி வைத்திருந்த காரியங்களைச் செய்யத் தொடங்க முடியும். பெற்றோருடன் இணக்கமான உறவு உண்டாகத் தொடங்கும். குடும்பத்தில் உங்களின் மதிப்பு மரியாதை உயரும். பெரியோர்களின் தொடர்பு கிட்டும்.
நீண்ட நாட்களாக வாட்டி வதைத்த உடல் உபாதைகளிலிருந்து விடுபட முடியும். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும். உங்கள் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். குடும்பத்தில் எதிர்பாராத மருத்துவ செலவுகள் வரும். பூர்விக சொத்துக்களால் லாபம் வரும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்ல வேண்டியிருக்கும். பண வரவுகளில் சுமாரான நிலையே இருக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகையை ஈடுபடுத்த வேண்டாம். கணவன் மனைவிடையே விட்டுக்கொடுத்தல் அவசியம். குடும்பத்தில் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். திருமணம் போன்ற சுப காரிய முயற்சிகளில் தாமத நிலை உண்டாகும். பூர்விக சொத்துக்களால் வீண் செலவுகள் ஏற்படும். நீங்கள் நல்லதாக நினைத்து செய்யும் காரியங்களும் உற்றார் உறவினர்களுக்கு தேவையற்ற பிரச்சனைகளை உண்டாக்கும். பிறரை நம்பி எந்த ஒரு வாக்குறுதியும் தர வேண்டாம்.
சில நேரங்களில் மனதில் வீண் கற்பனைகளும், தேவையற்ற பயமும் தோன்றக்கூடும். ஆன்மிகச் சிந்தனை அதிகரிக்கும். பல புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று வரும் வாய்ப்பு கிட்டும். உங்களை சுற்றியுள்ளோரிடம் நல்லவிதமாகப் பழகினால் அவர்களிடம் நற்பெயரை பெற முடியும். கேது 5ம் இடத்தில் வந்து அமர்வதால் முக்கியமாக பிள்ளைகளின் நலனில் கவனம் கொள்ள வேண்டியது அவசியமாகிறது. உங்களது ஆலோசனைகளும், அரவணைப்பும் அவர்களுக்குத் தேவைப்படும்.
வெற்றியைத் தரும் 11ம் இடத்தில் வந்து அமரவுள்ள ராகு உங்கள் செயல்களில் அசாத்தியமான வெற்றியைப் பெற்றுத் தருவார். மனதில் நினைத்ததை செயல்படுத்த முடியும். கேதுவினால் விவேகமும், ராகுவினால் வேகமும் இணைவதால் எல்லா விஷயங்களிலும் சாதகமான பலன் கிடைக்கும். ராகு லாப ஸ்தானத்தில் அமர்வதால் சிறப்பான தனலாபம் உண்டு.
பல்வேறு வழிகளில் பொருள் வரவு இருந்து வரும். சேமிப்புகள் உயரும். பூர்வீக சொத்துக்களில் இருந்து வந்த பிரச்னைகள் விலகி ஆதாயம் கிட்டும். 11ம் இடத்து ராகு அயல்நாட்டுப் பிரயாணத்திற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவார். பெண்கள் வழியில் ஒரு சில நன்மைகள் உண்டு.
உத்யோகத்தில் வேலைப்பளு காரணமாக சற்று சிரமத்தினை சந்திக்க நேரிடும். உத்யோகத்தில் எப்போதும் கவனமுடன் செயல்படவும். உத்யோகத்தில் கொடுத்த வேலையை சிறப்பாக செய்ய முடியும். தொழில் முறையில் கூடுதலான அலைச்சல் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும். கூட்டு தொழில், வியாபாரத்தில் கவனமாக இருக்கவும்.
மொத்தத்தில் வருகின்ற ஒன்றரை வருட காலமும் சிறப்பான நற்பலன்களைத் தரும் வகையில் அமைந்துள்ளது.
Astrology Predictions Written By :
" Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology).
Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831