துலாம் ராசி நேயர்களே : 26.4.2025 அன்று ராகு பகவான் ரண ருண ரோக ஸ்தானத்திற்கும் - கேது பகவான் விரைய ஸ்தானத்திற்கும் மாறுகிறார்கள். மனதளவில் சிரமத்தைத் தந்து வந்த கேது 12ம் இடத்தில் அமர்வதால் வீண் குழப்பங்கள் நீங்கி நல்லறிவினைப் பெற முடியும். குடும்பத்திலும் வெளியிலும் உங்கள் செல்வாக்கு உயரும். வண்டி வாகனம் வாங்கும் யோகமும் உண்டாகும். சமூகத்தில் உயர்ந்தோரின் ஆதரவு கிடைக்கும். ஆன்மீகத்திலும், தர்ம காரியங்களிலும் ஈடுபாடு அதிகரிக்கும்.
உற்றார் உறவினர்களுடன் மகிழ்ச்சியாகப் பொழுதை கழிக்க முடியும். எவருக்கும் வாக்குக் கொடுக்க வேண்டாம். யாருக்கும் முன்ஜாமீன் போட்டு உங்கள் பெயரில் கடன் வாங்கிக் கொடுக்காமல் இருப்பது நல்லது. மற்றவர்களுக்கு உதவி செய்யும் குணம் உங்களிடம் இயற்கையாகவே இருக்கும். அடுத்த ஒன்றரை ஆண்டு காலம் செய்ய உள்ள சேவை உங்கள் மதிப்பையும், மரியாதையையும் உயர்த்துவதோடு உங்கள் தனிப்பட்ட செல்வாக்கையும் உயர்த்தும்.
குடும்பத்தில் முன்னேற்றம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்பு ஏற்படலாம். திருமணத்தில் ஏற்பட்ட தடை நீங்கும். பொருளாதார நிலை வெளியில் சொல்லும்படி இருக்கும். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. குடும்பத்தில் தேவையற்ற அலைச்சல் அதிகரிக்கும். கணவன் மனைவி இருவரும் தங்களுக்குள் பரஸ்பரம் அனுசரித்து போகவும். புது நபர்களிடம் எப்போதும் அளவாக பேசவும். உறவினர்களிடம் மனஸ்தாபம் வராமல் இருக்க அவர்களை அனுசரித்து செல்லவும். பணம் தொடர்பாக யாருக்கும் வாக்குறுதி தர வேண்டாம்.
மறைமுக எதிரிகள் காணாமல் போவர். இது வரை உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்களை தானாக வந்து அடிபணிந்து போவார்கள். மனதில் இருந்து வரும் விரக்தி காணாமல் போகும். எந்த ஒரு காரியத்தையும் புத்துணர்ச்சியோடு செயல்பட்டு அதில் உடனடி வெற்றியைக் காணத் துவங்குவீர்கள். கடன் பிரச்னைகள் குறையத் துவங்கும். இதுநாள் வரை 7ம் இடத்தில் இருந்து வந்த ராகு 6ம் இடத்தில் சஞ்சரிக்க இருப்பது மிகுந்த நற்பலனைத் தரும்.7ல் இருந்து ராகு விலகுவதால் இதுநாள்வரை இருந்து வந்த திருமணத்தடை அகலும். 6ல் ராகு அமர்வதால் எதிரிகளை வெற்றிகொள்வது, கடன்தொல்லைகளிலிருந்து விடுபடுதல் போன்ற நற்பலன்கள் கிட்டும்.
6-ம் இடத்திற்கு வந்து அமர உள்ள ராகுபகவான் உடல்நிலையில் சற்று சிரமத்தைத் தருவார். உணவு விஷயத்தில் கட்டுப்பாட்டுடன் இருந்தால் மட்டுமே உடல் நிலை சரியான நிலையில் இருக்கும். குடும்ப மருத்துவரிடம் அணுகி உங்கள் உடலுக்கு தேவையான ஆலோசனையை பெற்றுக்கொண்டு உடல் உபாதைகளை சரிசெய்து கொள்ளவும். ராகு கேது பெயர்ச்சியினால் பெற்றோர் உடல் நிலையில் அதிக கவனம் எடுத்துக்கொள்ளவும். வாழ்க்கைத் துணையின் உறவினர்கள் உங்கள் உதவியை நாடி வரக்கூடும். அநாவசிய செலவுகள் முற்றிலும் குறையும்.
வெளிநாட்டு உத்யோகத்திற்காகக் காத்திருப்போருக்கு அதற்கான வாய்ப்புகள் தேடிவரும். உத்யோகத்தில் வேலை பளு அதிகமாக இருந்தாலும் சக ஊழியர்களின் ஆதரவு முழுமையாக கிடைக்கும். உத்யோகத்தில் எதிர்பாராத இடமாற்றங்கள் அலைச்சலை ஏற்படுத்தும். ராகுவின் அருளால் தொழில் ரீதியாக சிறப்பான தனலாபத்தைக் பெற முடியும். தொழில், வியாபாரத்தில் நல்ல நல்ல வாய்ப்புகள் வந்து சேரும். தொழில், வியாபாரம் தொடர்பாக நிறைய விஷயங்களை கற்றுக்கொள்ள முடியும்.
நிகழவுள்ள இந்த ராகு கேது பெயர்ச்சி உங்கள் மனநிலையில் பெருத்த மாற்றத்தை உண்டாக்கும்.
Astrology Predictions Written By :
" Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology).
Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831