ராகு கேது பெயர்ச்சி பலன்கள் |
ராகு - கேது பெயர்ச்சி பலன்கள் (2025 - 2026) ஒரு ராசி கட்டத்தில் அதிக நாட்கள் இருக்கும் குரு, சனி, ராகு-கேது போன்ற பெயர்ச்சிகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருத்துப்படுகிறது. அந்த வகையில் பார்க்கும் போது ராகு-கேது பெயர்ச்சி மிக முக்கிய பெயர்ச்சியாகும். ராகுவும்-கேதுவும் நேர் எதிர் எதிரே நின்று சுழலக்கூடியவை. அவை இரண்டும் ஒரே நாளில் தான் இடம் பெயருவார்கள். 2025 ஆம் ஆண்டு ராகு கேது பெயர்ச்சி, வாக்கிய பஞ்சாங்கம் படி ஏப்ரல் 26 ஆம் தேதி (26.04.2025) நிகழும். ராகு மீன ராசியிலிருந்து கும்ப ராசிக்கு, கேது கன்னி ராசியிலிருந்து சிம்ம ராசிக்கு பெயர்ச்சியாகிறார்கள். திருக்கணித பஞ்சாங்கத்தின் படி, ராகு கேது பெயர்ச்சி மே 18 ஆம் தேதி (18.05.2025) நடைபெறும். இந்த ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் ஒவ்வொரு ராசி வாரியாக விரிவாக கணித்து கொடுக்கப்பட்டு உள்ளது. பொதுவாக ஜோதிட விதி படி ராகு - கேது 3,6,11 இடத்தில் இருந்தால் நல்ல பலன்களை தருவார். மற்ற இடத்தில் இருந்தால் இருக்கும் இடத்தை பொருத்தும், ராகு-கேது பலத்தை பொருத்தும் நன்மை, தீமையான பலன்களை செய்வார் என்பது ஜோதிட விதி. கோச்சார அடிப்படையில் பலன் பார்க்கும்போது ஒரு குறிப்பிட்ட கிரகத்தை மட்டும் வைத்து பலன் பார்க்கக்கூடாது. அதன்படி, முக்கிய கிரகங்களான சனி, ராகு, கேது ஆகியவையின் இருப்பிடத்தைக்கொண்டும் ஆராய்ந்து இங்கே பலன்கள் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த ராகு கேது பெயர்ச்சியால் ராகுவினால் நன்மை அடையும் ராசிகள் மேஷம், மகரம், சிம்மம், கேதுவால் நன்மை அடையும் ராசிகள் கடகம், துலாம், கும்பம். இந்த 6 ராசிகள் ராகு கேதுவால் நன்மை அடையும் ராசிகள். மற்ற ராசிகள் சுமாரான பலன்கள் தரும். இங்கே கொடுக்கப்பட்டுள்ளது கோச்சார பலன்களே. இதில் அவரவர் ஜாதத்தில் நடக்கும் நடப்பு திசை, புத்தி சாதகமாக இருக்கும் பட்சத்தில் பலன்கள் மாறலாம். ஆகையால் சரியான பரிகாரம் மூலம் ராகு கேதுவால் வரும் பிரச்சனைகளை குறைத்து வாழ்வில் முன்னேற்றம் அடையாளம். ஜோதிட பலன்களை கணித்து எழுதியவர் "ஆலந்தூர்" A.வினோத் குமார், Ph.d (Astrology), அலைபேசி : 9003019831 |
Astrology Predictions Written By :
" Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology).
Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831