KUMBAM Ragu Kethu Peyarchi Palan
கும்ப ராசி நேயர்களே : 2026-ம் ஆண்டு கும்ப ராசிக்கு ராகு-கேது பெயர்ச்சி முக்கிய மாற்றங்களையும், ஆண்டின் இறுதியில் புதிய திருப்புமுனையையும் தருகிறது. 05.12.2026 அன்று ராகு பகவான் விரைய ஸ்தானத்திற்கும் - கேது பகவான் ரண ருண ரோக ஸ்தானத்திற்கும் மாறுகிறார்கள். இதனால் கூடுதலான அலைச்சல் உண்டாகும் என்றாலும் நல்ல தனலாபம் உண்டு. ஆடம்பர செலவுகள் அதிகரிக்கும். சம்பாதிக்கும் பணத்தினை முறையான வழியில் சேமிப்பது அவசியம். யோசிக்காமல் செய்யும் முதலீடுகளில் பண நஷ்டத்தினை சந்திக்க நேரிடும். அதிக லாபத்திற்கு ஆசைப்படாமல் அங்கீகரிக்கப்பட்ட இடங்களில் பணத்தை சேமிப்பது நன்மை தரும். பண விஷயத்தில் கூடுதல் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. அதிகப்படியான இலக்குகள், எதையும் சாதிக்க வேண்டும் என்ற துடிப்பு மற்றும் சொந்த ஆளுமையில் திடீர் மாற்றங்கள் ஏற்படும். புதிய முயற்சிகள் எடுக்கும்போது அவசர முடிவுகளைத் தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் விலகும். கணவன் மனைவிடையே அன்யோன்யம் ஏற்படும். திருமண காரியம் விரைவில் கைகூடும். பண வரவுகள் காரணமாக குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். பழைய கடன்கள் அடைப்படும். சொந்த வீடு, வாகனம் யோகம் உண்டாகும். அடுத்தவருக்கு கொடுத்த வாக்குறுதியை காப்பாற்ற முடியும். கொடுக்கல், வாங்கல் லாபமளிக்கும். வெளிவட்டார தொடர்புகள் விரிவடையும். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் நிறைந்திருக்கும். புத்திரர் வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். அடிக்கடி தொலைதூரப் பிரயாணங்கள் செல்ல வேண்டியிருக்கும்.ஒரு சிலருக்கு வெளிநாட்டு பயணத்திற்கான வாய்ப்பு உண்டு. நண்பர்களுக்காக உதவி செய்யும் சூழல் உருவாகும். வாழ்க்கைத் துணையின் உடல்நிலையில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். ராகுவின் இடமாற்றம் உங்கள் வேகத்தினைக் குறைக்கும். உங்களது அதிரடி நடவடிக்கையை பார்த்து மற்றவர்கள் அசந்து போவர். எதிலும் பொறுமை காப்பதனால் மட்டுமே நீங்கள் பின்னாளில் பல முக்கிய பொறுப்புகளை ஏற்று செயல்பட இயலும். வழக்கு விவகாரங்களில் சமாதானமாகப் போவது நல்லது. வேகத்தினைவிட விவேகமே சிறந்தது என்பது அனுபவப் பூர்வமாக உணருவீர்கள். குடும்பத்தில் நீங்கள் விட்டுக்கொடுத்துச் செல்வதால் உங்கள் கௌரவம் உயரும். எதிலும் பொறுமையுடன் இருந்தால் மட்டுமே நற்பலனை அனுபவிக்க முடியும். ஆறாம் இடத்தில் அமருகின்ற கேது பகவான் எதிரிகளை வெல்வார். தான் அமரும் இடத்தின் வலிமையைக் குறைப்பவர் கேது என்பதால் கடன் பிரச்னைகள் குறையும்.
உத்யோகத்தில் உயரதிகாரிகளின் ஆதரவு மகிழ்ச்சியை தரும். உத்யோகத்தில் உங்கள் திறமைகள் வெளிப்பட ஆரம்பிக்கும். உத்யோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றங்களும் ஊதிய உயர்வுகளும் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் லாபம் பெருகும். தொழில், வியாபாரத்தில் எடுக்கும் முயற்சிகளில் அனைத்திலும் வெற்றிகள் கிட்டும்.
நீண்ட நாள் உடல் உபாதைகள் நீங்கும். உடல் ஆரோக்யம் பெறும். எவர் ஒருவரையும் சார்ந்திருக்காது தனித்து செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். குடும்பத்தில் ஆடம்பர பொருள் சேர்க்கை உண்டாகும். ஜனன ஜாதகத்தில் கேதுவின் வலிமை இருக்கப் பிறந்தவர்களுக்கு கேதுவின் அனுக்கிரகத்தால் திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும் வாய்ப்பு உள்ளது. மொத்தத்தில் ராகு பகவான் சற்று அலைச்சலைத் தந்தாலும் கேது அதற்குண்டான நற்பலன்களைத் தந்து உங்கள் வாழ்க்கை நிலையை உயர்த்துவார்.
சிறப்பு பரிகாரம்:
ராகு தோஷ நிவர்த்திக்கு: சனிக்கிழமைகளில் துர்க்கை அம்மனுக்கு உளுந்து தானம் செய்து வழிபடலாம்.
கேது தோஷ நிவர்த்திக்கு: செவ்வாய்க்கிழமைகளில் விநாயகப் பெருமானுக்கு கொள்ளு தானம் செய்வது நற்பலன்களைத் தரும்
Astrology Predictions Written By :
" Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology).
Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831