RISHABAM Ragu Kethu Peyarchi Palan
ரிஷப ராசி நேயர்களே : தொழில் மற்றும் வாழ்க்கையில் முக்கிய மாற்றங்களும், முன்னேற்றங்களும் ஏற்படும். 05.12.2026 அன்று ராகு பகவான் பாக்கிய ஸ்தானத்திற்கும் - கேது பகவான் தைரிய ஸ்தானத்திற்கும் மாறுகிறார்கள். இந்த பெயர்ச்சி உங்களுக்கு நற்பலன்களைத் தரும் வகையில் அமையும். மூன்றாம் இடத்தில் அமரும் கேதுவின் அருளால் எந்த ஒரு விஷயத்தையும் ஒருமுறைக்கு இருமுறை ஆராயும் மனப்பக்குவம் தோன்றும். மனோ தைரியத்துடனும் செயல்படுவீர்கள். மனதில் நினைத்த காரியத்தை உடனே செயல்படுத்துவீர்கள். கேதுவின் 3-ம் இடத்துச் சஞ்சாரம் உடன்பிறந்தோருடன் சின்ன கருத்து வேறுபாட்டினைத் ஏற்படுத்தும். உங்களது செயல்கள் அடுத்தவர் பொறாமை படும்படி இருக்கும். குடும்பத்தில் சுப காரியங்களில் ஏற்பட்ட தடைகள் விலகும். சுக வாழ்வு அமையும். சொந்தமாக வீடு, வாகனம் வாங்க கூடிய யோகம் அமையும். எடுத்த காரியத்தில் வெற்றி மேல் வெற்றி கிட்டும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்லவும். பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது முக்கியம். பண வரவு தாராளமாக இருப்பதால் பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். பண விஷயமாக எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். மறைமுக எதிரிகள் காணாமல் போவார்கள். உங்களை சுற்றி இருப்பவர்களிடம் சற்று கவனமாக இருப்பது நல்லது. குடும்பப் பெரியவர்களின் விருப்பத்தினை நிறைவேற்ற முடியும். பூர்வீக சொத்துகளில் இருந்து வந்த பிரச்னைகள் விலகும். குடும்பத்தில் நடைபெறும் விசேஷங்களில் உங்களின் பங்களிப்பு முக்கியத்துவம் பெறும். முக்கியமான பணிகளை செய்ய யாரையும் நம்பாமல் நீங்களே நேரடியாக காரியத்தில் இறங்குவது நல்லது. புதிய சொத்து வாங்க முயற்சிப்போருக்கு கால நேரம் கூடிவரும். விலகியிருந்த உறவினர்கள் நெருங்கி வருவார்கள். கு 9ம் இடத்தில் அமர்வது ஓரளவிற்கு முன்னேற்றத்தினைத் தரும். பெற்றோர் மற்றும் உங்கள் வாரிசுகளின் உடல்நிலையில் கவனம் செலுத்துவது அவசியம் ஆகிறது.
உத்யோகத்தில் அந்தஸ்தும், கௌரவம் கிடைக்கும். வெளிநாடு சென்று பணிபுரியும் வாய்ப்பு கிட்டும். தொழில், வியாபாரம் அமோகமாக நடைபெறும். தொழில், வியாபாரத்தில் போட்டிகள் குறையும். சுயதொழில் செய்வோர் புதிய அணுகுமுறையின் மூலம் சிறப்பான தனலாபத்தினை அடைவார்கள். தொழில், வியாபாரத்தில் உள்ள சூட்சமங்கள் புரியவரும்.
9ம் இடத்து ராகு அயல்நாட்டுப் பிரயாணத்திற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவார். வாகன பயணத்தின் கவனமாக இருக்கவும். மொத்தத்தில் வருகின்ற ஒன்றரை வருட காலத்தில் அசையாச் சொத்துகள் அமைவதோடு உங்கள் வாழ்வியல் தரத்தை உயர்த்துகின்ற வகையில் இருக்கும்.
சிறப்பு பரிகாரம்:
ராகு தோஷ நிவர்த்திக்கு: சனிக்கிழமைகளில் துர்க்கை அம்மனுக்கு உளுந்து தானம் செய்து வழிபடலாம்.
கேது தோஷ நிவர்த்திக்கு: செவ்வாய்க்கிழமைகளில் விநாயகப் பெருமானுக்கு கொள்ளு தானம் செய்வது நற்பலன்களைத் தரும்
Astrology Predictions Written By :
" Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology).
Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831