VIRUCHIKAM Ragu Kethu Peyarchi Palan
விருச்சிக ராசி நேயர்களே : மன தைரியம் அதிகரிக்கும், புதிய முயற்சிகளுக்கு நல்ல வெற்றி கிடைக்கும். 05.12.2026 அன்று ராகு பகவான் தைரிய வீரிய ஸ்தானத்திற்கும் - கேது பகவான் பாக்கிய ஸ்தானத்திற்கும் மாறுகிறார்கள். இதனால் சற்று கூடுதலான அலைச்சலை சந்திக்க வேண்டியிருக்கும். நீங்கள் நினைத்தது நிறைவேறும் பெயர்ச்சியாக அமையும். மனதினில் அவ்வப்போது விரக்தியான எண்ணங்கள் தோன்றும். எப்போதும் ஒரே மனநிலையுடன் இருக்க கற்றுக் கொள்ளுங்கள். நீங்கள் விரும்பியது கிடைக்காவிட்டாலும், கிடைத்ததை விரும்பினால் வெற்றி நிச்சயம். பணவரவு திருப்திகரமாக இருக்கும். தடைப்பட்ட திருமணம் போன்ற சுப காரியங்கள் தடை விலகி இனிதாக நடைபெறும். குழந்தை இல்லாதவர்களுக்கு விரைவில் புத்திர பாக்கியம் கிட்டும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். புதிதாக எடுத்த முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். பூர்விக சொத்துக்கள் மூலம் நல்ல லாபம் வரும். பெற்றோருடன் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்பு உண்டு. உடல்நிலையில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். கணவன் மனைவிடையே ஒற்றுமை பலப்படும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை உண்டாகும். பொருளாதார நிலை சீராக இருக்கும். பூர்வீகச் சொத்துகளில் ஒருசில இழப்புகளைக் காண நேரிடும். பொதுநல சேவைகள், தர்ம காரியங்கள், ஆன்மிகப் பணிகள் ஆகியவற்றில் முன்நின்று செயல்படும் வாய்ப்புகள் உருவாகும். ராகுபகவான் சஞ்சார நிலை மனதில் புது தைரியத்தினை உருவாக்கும். முக்கியமாக முடிவெடுக்க வேண்டிய தருணங்களில் அவசரம் காட்டாமல் பொறுமையாக உங்கள் காரியத்தை சாதித்துக்கொள்ளவும். எந்த சூழ்நிலையிலும் அவசரப்படாமல் நிதானம் காப்பது நல்லது. ராகு, மூன்றாவது ஸ்தானத்தில் அமர்வதால் உடன்பிறந்தோருடன் கருத்து வேறுபாடு, சொத்துப் பிரச்னைகள் வர வாய்ப்பு உண்டு. ராகு சற்று சிரமத்தைத் தந்தாலும் பண வரவை ஏற்படுத்தி பொருளாதார நிலையை உயர்த்துவார்.
உத்யோக ரீதியாக எதிர்பாராத இடமாற்றத்தினை சந்திக்க நேரலாம். வெளிநாட்டுப் பணிகளுக்காகக் காத்திருப்போருக்கு அதற்கான வாய்ப்புகள் தேடிவரும். உத்யோகத்தில் உயர்வான நிலை ஏற்படும். ஒருசிலருக்கு தொழில் காரணமாக குடும்பத்தினரை விட்டுப் பிரிந்திருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். வெளியூர், வெளிநாட்டு தொடர்புடைய வாய்ப்புகளும் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் நல்ல லாபம் வரும்.
ராகுவின் இடமாற்றம் உங்கள் மனதில் அசாத்தியமான தைரியத்தை இடம்பெறச் செய்யும். அடுத்தவர் செய்யத் தயங்கும் காரியத்தினை எவ்வித தயக்கமுமின்றி சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். நிலுவையில் இருந்து வரும் குலதெய்வ வழிபாடு, நீண்ட நாள் பிராத்தனையை நிறைவேற்றுவது போன்றவற்றை இந்த வருடத்தில் செய்து முடிப்பது சிறப்பு.
சிறப்பு பரிகாரம்:
ராகு தோஷ நிவர்த்திக்கு: சனிக்கிழமைகளில் துர்க்கை அம்மனுக்கு உளுந்து தானம் செய்து வழிபடலாம்.
கேது தோஷ நிவர்த்திக்கு: செவ்வாய்க்கிழமைகளில் விநாயகப் பெருமானுக்கு கொள்ளு தானம் செய்வது நற்பலன்களைத் தரும்
Astrology Predictions Written By :
" Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology).
Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831