| ராகு கேது பெயர்ச்சி பலன்கள் |
|
ராகு - கேது பெயர்ச்சி பலன்கள் (2026 - 28) ஒரு ராசி கட்டத்தில் அதிக நாட்கள் இருக்கும் குரு, சனி, ராகு-கேது போன்ற பெயர்ச்சிகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருத்துப்படுகிறது. அந்த வகையில் பார்க்கும் போது ராகு-கேது பெயர்ச்சி மிக முக்கிய பெயர்ச்சியாகும். ராகு-கேது ஆகிய இரண்டு கிரகங்களும் நிழல் கிரகங்களாவர். ராகுவும்-கேதுவும் நேர் எதிர் எதிரே நின்று சுழலக்கூடியவை. அவை இரண்டும் ஒரே நாளில் தான் இடம் பெயருவார்கள். ஜோதிடத்தில் இந்த இரண்டு கிரகங்களுக்கும் மற்ற கிரகங்களைப் போல் சொந்த ராசி எதுவும் இல்லை. இருப்பினும்ராகுவும் கேதுவும் எந்த ராசியில் இருக்கிறார்களோ அதுவே அவர்களின் வீடு. இப்படிப்பட்ட ராகுவும், கேதுவும் ஒரு ராசியில் 18 மாதங்கள் வரை இருப்பார்கள். அந்த வகையில் 2026 டிசம்பர் 5 ஆம் தேதி இரவு 8:03 மணிக்கு ராகு மற்றும் கேது ஆகிய இருவரும் தங்கள் ராசிகளை மாற்றப் போகிறார்கள். அப்பெயர்ச்சியால் ராகு சனி பகவானைப் போலவும், கேது பகவான் சந்திரனைப் போலவும் செயல்படுவார். இப்படி ராகு-கேதுவின் நிலையில் ஏற்படும் மாற்றங்களின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலுமே காணப்படும். ராசி வாரியாக விரிவாக கணித்து கொடுக்கப்பட்டு உள்ளது. பொதுவாக ஜோதிட விதி படி ராகு - கேது 3,6,11 இடத்தில் இருந்தால் நல்ல பலன்களை தருவார். மற்ற இடத்தில் இருந்தால் இருக்கும் இடத்தை பொருத்தும், ராகு-கேது பலத்தை பொருத்தும் நன்மை, தீமையான பலன்களை செய்வார் என்பது ஜோதிட விதி. கோச்சார அடிப்படையில் பலன் பார்க்கும்போது ஒரு குறிப்பிட்ட கிரகத்தை மட்டும் வைத்து பலன் பார்க்கக்கூடாது. அதன்படி, முக்கிய கிரகங்களான சனி, ராகு, கேது ஆகியவையின் இருப்பிடத்தைக்கொண்டும் ஆராய்ந்து இங்கே பலன்கள் கொடுக்கப்பட்டு இருக்கிறது. நன்மை பெரும் ராசிகள்: ரிஷபம், சிம்மம், கன்னி, விருச்சிகம், மீனம் பாதிப்பு அடையும் ராசிகள் : மேஷம், மிதுனம், கடகம், தனுசு, மகரம், கும்பம் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது கோச்சார பலன்களே. இதில் அவரவர் ஜாதத்தில் நடக்கும் நடப்பு திசை, புத்தி சாதகமாக இருக்கும் பட்சத்தில் பலன்கள் மாறலாம். ஆகையால் சரியான பரிகாரம் மூலம் ராகு கேதுவால் வரும் பிரச்சனைகளை குறைத்து வாழ்வில் முன்னேற்றம் அடையாளம். ஜோதிட பலன்களை கணித்து எழுதியவர் "ஆலந்தூர்" A.வினோத் குமார், Ph.d (Astrology), அலைபேசி : 9003019831 |
Astrology Predictions Written By :
" Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology).
Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831