 THULAM Ragu Kethu Peyarchi Palan
   
			THULAM Ragu Kethu Peyarchi Palan
            துலாம் ராசி நேயர்களே : 26.4.2025 அன்று ராகு பகவான் பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கும் - கேது பகவான் லாப ஸ்தானத்திற்கும் மாறுகிறார்கள். 5ம் இடத்து ராகுவினால் சிந்தனையில் குழப்பங்கள் தோன்றும். மனதில் தேவையற்ற பயம் வந்து போகும். இதனால் உடல்நிலையில் லேசான பாதிப்புகள் உருவாகலாம். உடலில் சிறு சிறு தொந்தரவுகள் ஏற்பட்டு பின் சீராகும். வெளி உணவுகளை முடிந்தவரை தவிர்ப்பது உடல் ஆரோக்யத்திற்கு நல்லது. குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடக்கும். சுபச்செலவுகள் உண்டாகும். குடும்பத்தினருடன் விட்டுக் கொடுத்து போகவும். ஒரு சிலருக்கு சொந்த வீடு வாங்கும் யோகம் உண்டு.
உங்கள் பொறுப்புகளை எல்லாம் விரைவில் முடித்து விட முடியும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். பயணங்கள் மேற்கொள்ள முடியும். நல்லச் செய்தி ஒன்று உங்களை தேடி வரும். சமுதாயத்தில் உள்ளவர்களின் ஆலோசனைகள் கிடைக்கும். புது நட்பு வட்டாரம் உருவாகும். தேவையற்ற நட்பு வட்டாரங்களை தவிர்க்கவும். எதையும் ஒளிவு மறைவின்றி வெளிப்படையாக பேசுவதால் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
எவரையும் எடுத்தெறிந்து பேசாமல், எல்லோரையும் அனுசரித்து செல்லும் பழக்கத்தினை வளர்த்துக் கொள்ளவும். 5-ம் இடத்தில் சஞ்சரிக்க உள்ள ராகுபகவான் எதிர்பாராத இடமாற்றத்தைத் தருவார். குடும்பத்தினருடன் இருக்கும் வாய்ப்புகள் குறையும். ஒரு சிலருக்கு குடும்பத்தை விட்டு பிரிந்து தொழில் ரீதியாக வெளியூர் செல்லும் வாய்ப்பு உருவாகும்.
பணவரவுகளுக்கான பஞ்சம் இருக்காது. கடன் பிரச்சனை பாதியாக குறையும். குடும்பத்தில் தடைப்பட்டு கொண்டு இருந்த சுப காரியங்கள் யாவும் தடை விலகி கைகூடும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு விரைவில் புத்திர பாக்கியம் கிட்டும். கணவன் மனைவி இருவரும் மனம் விட்டு பேசினால் வரும் பிரச்னைகள் குறையும். வெளிவட்டாரத்தில் நல்ல மதிப்பு கிடைக்கும். உற்றார், உறவினர்களின் ஆதரவு அமோகமாக இருக்கும். சிலருக்கு சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும். வீட்டில் பொருள் சேர்க்கை உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் தேவை. உற்றார், உறவினர்களை அனுசரித்து போவது எல்லா வகையிலும் நல்லது.
கூட்டுக் குடும்பத்தில் இருந்து வருபவர்கள் எதிர்பாராத இடமாற்றத்தினால் பிரிவினையை சந்திக்கக் கூடும். ஒரு சில நேரங்களில் நீங்கள் நினைப்பது ஒன்றும் நடப்பது ஒன்றுமாக இருக்கும். சொன்ன சொல்லைக் காப்பாற்ற கூடுதலாக செலவழிக்க வேண்டியிருக்கும்.அசையாச் சொத்துகள் சேரும் வாய்ப்பு உள்ளது. பூர்வீகச் சொத்துகளில் இருந்து வந்த வில்லங்கம் நீங்கும். சொத்து பிரச்னைகள் முடிவிற்கு வரும். அநாவசிய செலவுகள் கட்டுப்படுத்தப்படும். அதேநேரத்தில் 11ம் இடத்தில் இருக்கும் கேது தான தருமங்களுக்காக அதிகம் செலவழிக்க வைப்பார்.
உத்யோகத்தில் உங்கள் திறமைக்கு நல்ல அங்கீகாரம் கிடைக்கும். உத்யோகத்தில் எதிர்பார்த்த ஊதிய உயர்வு கிடைக்கும். அயல்நாட்டுப் பணிக்காக காத்திருப்போருக்கு அதற்கான வாய்ப்புகள் கூடி வரும். தொழில், வியாபார ரீதியாக அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ள வேண்டிவரும். தொழில், வியாபாரம் தொடர்பாக நிறைய ஆலோசனைகள் கிடைக்கும்.
மொத்தத்தில் வரவுள்ள ராகு கேது பெயர்ச்சியானது சிந்தனையில் குழப்பத்தைத் தந்தாலும், உங்கள் மதிப்பையும், மரியாதையையும் கூட்டுவதோடு சமூகத்தில் புகழைப் பெற்றுத் தரும்.            
Astrology Predictions Written By : 
" Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology).
Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831