VIRUCHIKAM Ragu Kethu Peyarchi Palan
விருச்சிக ராசி நேயர்களே : 26.4.2025 அன்று ராகு பகவான் சுக ஸ்தானத்திற்கும் - கேது பகவான் தொழில் ஸ்தானத்திற்கும் மாறுகிறார்கள். உங்கள் ராசிக்கு தொழிலைக் குறிக்கும் 10ம் இடத்திற்கு கேது வர உள்ளார். தொழில் ஸ்தானத்தில் அமரும் கேது தொழில் முறையில் சிறிது சிரமத்தினைத் கொடுத்தாலும், நல்லதொரு அனுபவங்களைத் கற்றுத்தரும். உங்களுக்கு உதவி செய்திட பலரும் முன் வருவர். மனதை உறுத்தி கொண்டிருந்த பிரச்சினைகளுக்கு நல்ல தீர்வுத் தெரியும். குடும்பப் பிரச்சினைக்கு சாதகமான முடிவு கிடைக்கும்.
புதிய முயற்சிகளும் ஓரளவுக்குக் கை கொடுக்கும். குடும்ப விவகாரங்களில் அடுத்தவர் தலையீடு இல்லாமல் பார்த்துக் கொள்ளவும். செய்ய வேண்டிய கடமைகளில் சிறிதும் அலட்சியம் காட்டக் கூடாது. கவனக்குறைவாக செயல்பட்டால் ஒரு சில இழப்புகளை சந்திக்க நேரிடும். 4ம் இமாகிய சுக ஸ்தானத்தில் ராகுபகவான் அமர உள்ளார். ராகுவின் சஞ்சாரம் வாழ்வியல் தரத்தினை உயர்த்தும் வகையில் இருக்கும். வீடு, வாகனம், மனை சொத்துக்கள் புதிதாய் சேரும். 4-ம் இடத்து ராகு, ஓய்வினைக் கெடுத்து, சிறிது அலைச்சலைத் தந்தாலும் அதிலும் நாம் எதிர்பார்க்கும் லாபத்தினைப் பெற்றுத் தருவார். வெளியூர் பிரயாணங்கள் அடிக்கடி செல்ல நேரிடும். தாயாரின் உடல்நிலையில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.
குடும்ப ஒற்றுமை சுமாராக தான் இருக்கும். அனைவரிடமும் விட்டுக்கொடுத்து போவது அவசியம். உற்றார் உறவினர்களால் வீண் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். குடும்ப விஷயங்களை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்வதை தவிர்க்கவும். புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். இதுவரை இருந்த மறைமுக எதிர்ப்புகள் மறையும். வீண், வம்பு வழக்குகள் முடிவுக்கு வரும். பெருளாதார நிலை ஓரளவு சிறப்பாக இருக்கும். சொத்துக்கள் வாங்கும் விஷயங்களில் அனுகூலமான பலன் கிட்டும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். வெளிவட்டார பழக்கவழங்களில் கவனமுடன் செயல்படுவது நல்லது. எந்த ஒரு எதிர்ப்பையும் எதிர்கொண்டு ஜெயிக்க முடியும். எதிர்பாராத வகையில் மருத்துவ செலவுகள் வரும்.
ராகுவின் சாதகமான சஞ்சாரம் புதிய சொத்துகளைச் சேர்க்கும். குடியிருக்கும் வீட்டினில் பராமரிப்பு பணிகளைச் செய்வது, வீட்டினை அழகு படுத்த முடியும். பூர்வீகச் சொத்துப் பிரச்னைகள் முடிவிற்கு வரும். உறவினர்களிடம் மனஸ்தாபம் உண்டானாலும் அதைப்பற்றிக் கவலைப்பட வேண்டாம். நாளடைவில் உங்களிடம் உறவினர்களிடம் மீண்டும் வந்து சேருவர். வாகனத்தில் மித வேகம் பின்பற்றவும். இந்த ராகு கேது பெயர்ச்சி, உங்கள் வாழ்க்கையில் திருப்புமுனையாக அமையும்.
உத்யோகத்தில் ஏற்ற இறக்கமான நிலை இருக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் ஒரு சில சிரமங்களுக்கு ஆளாக நேரிடும். புதியதாகத் தொழில் தொடங்கவும், ஏற்கெனவே செய்து வரும் தொழிலினை விருத்தி செய்ய எதிர்பார்த்த வங்கி கடன் எந்தவிதத் தடையுமின்றி கிடைக்கும். தொழில், வியபாரத்தில் விட்டுக் கொடுத்துச் செல்லும் மனப்பான்மை உருவாகும்.
இந்த ராகு கேது பெயர்ச்சி தனுசு ராசிக்காரர்களுக்கு நற்பலன்களை விளைவிக்கும் வகையில் சிறப்பாகவே அமைந்துள்ளது.
Astrology Predictions Written By :
" Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology).
Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831