KANNI Rasi Palan Weekly
கன்னி ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, உங்களுடைய சாமர்த்தியமான செயல்களால் பல விஷயங்களை சாதிக்க முடியும். முக்கிய விஷயங்களில் பொறுமையுடனும், நிதானத்துடனும் செயல்படவும். நீண்ட நாள் பிரச்னைகள் சுமூக முடிவிற்கு வரும். பெரியோர்களின் ஆதரவு சிறப்பாக இருக்கும். உறவினர்களுடன் கருத்து வேற்றுமை வரலாம். வீடு, வாகனங்கள் தொடர்பான செலவு ஏற்படும். எதிர்பாராத திருப்பங்களால் சிலரது வாழ்க்கைத் தரம் உயரும். இழுபறியாக இருந்த சில காரியங்கள் நல்லவிதமாக நடந்து முடியும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் உண்டாகும். முக்கிய நபர்களின் அறிமுகம் கிடைப்பதுடன் அவர் மூலம் உதவியும் கிடைக்கும். காரிய தடைகள் விலகும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு. தொழில், வியாபாரத்தில் உள்ள சூட்சமங்கள் புரியவரும்.
பரிகாரம் : பைரவரை வணங்கி வழிபடவும்.
Astrology Predictions Written By :
" Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology).
Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831 Email: alandurastrologer@gmail.com