MESHAM Rasi Palan Weekly
மேஷ ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, குடும்பத்தில் நல்லதும் கேட்டதும் கலந்தே நடக்கும். பொருளாதார நிலை எப்போதும் போல இருக்கும். உங்கள் காரியத்தில் எப்போதும் கண்ணும் கருத்துமாக இருக்கவும். எதிர்பார்த்த செலவுகளை விட எதிர்பாராத செலவுகள் தான் அதிகம் இருக்கும். சாமர்த்தியமான பேச்சின் மூலம் பல காரியங்களை சாதிக்க முடியும். அடுத்தவருக்கு உதவிகள் செய்யும் போது கவனமாக இருப்பது நல்லது. எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். வாடகை வீட்டில் வசிப்பவர்கள் வீடு மாற்றலாகி செல்லகூடும். குடும்பத்தில் வசதி வாய்ப்புகள் பெருகும். கணவன் மனைவி ஒருவருக்கொருவர் விட்டுகொடுத்து செல்லவும். எதையும் ஒரு காரியத்தையும் ஒரு முறைக்கு பலமுறை யோசித்து செய்வது நன்மை தரும். உத்யோகத்தில் சில சலுகைகள் கிடைக்கும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பாதையில் செல்லும்.
பரிகாரம் : முருகரை வணங்கி வழிபடவும்.
Astrology Predictions Written By :
" Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology).
Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831 Email: alandurastrologer@gmail.com