மிதுன ராசி அன்பர்களே, இந்த வாரம் குடும்பத்தில் மகிழ்ச்சியான தகவல்கள் வந்து சேரும். உங்களுடைய நல்ல குணம் மற்றவர்களுக்கு புரிய ஆரம்பிக்கும். உதவி கேட்டு வந்தவர்களுக்கு நீங்கள் வேண்டிய உதவியை செய்து தர இயலும். அக்கம் பக்கம் உள்ளவர்களின் ஆதரவு பெருகும். முக்கிய விஷயங்களில் பொறுமையுடனும், நிதானத்துடனும் செயல்படவும்.பணப்புழக்கம் நன்றாக உள்ளது. மேலும், வரவேண்டிய நிலுவை பணம் வந்து சேரும். குடும்பத்தில் உங்கள் கருத்துக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும். கணவன் மனைவி ஒற்றுமையில் பலம் உண்டு. பெரியோர்களின் ஆதரவு சிறப்பாக இருக்கும். சுற்று வட்டாரத்தில் பிரச்சனைகள் வராமல் இருக்க பொறுமையை கடைப்பிடிக்கவும். தொழில், வியாபாரத்தில் சில சிக்கல்கள் இருந்தாலும் அதை தீர்க்க கூடிய திறமை இருக்கும். தொழில், வியாபாரம் தொடர்பாக பயணம் மேற்கொள்ள வேண்டி வரும்.
பரிகாரம் : லக்ஷ்மி நரசிம்மரை வணங்கி வழிபடவும்.
Astrology Predictions Written By :
" Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology).
Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831 Email: alandurastrologer@gmail.com