விருச்சிக ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, எதையும் துணிவுடன் எதிர்கொள்ளும் ஆற்றல் வந்து சேரும். உங்களை சுற்றி இருப்பவர்களிடம் அனுசரணையாக நடந்து கொள்ளவும். பொருளாதார வரவுகளும், ஆடை, ஆபரணச் சேர்க்கைகளும் அபரிமிதமாக இருக்கும். நண்பர்கள் சிலரால் மனக்கசப்பு ஏற்படலாம். குடும்பத்துடன் தெய்வ வழிபாடு செய்வீர்கள். மன சஞ்சலம் மாறி மன நிம்மதி ஏற்பட வாய்ப்புண்டு. வாகன பயணங்களில் கவனம் தேவை. கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். திருமணம் சம்பந்தமான முயற்சிகள் கைகூடும். பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சனைகள் தீரும். உத்தியோகத்தில் பணிகளை கவனமாக மேற்கொள்ளலாம். தொழில், வியாபாரத்தில் சில இடையூறுகள் ஏற்பட்டு பின் சீராகும்.
பரிகாரம் : விநாயகரை அருகம்புல் வைத்து வழிபடவும்.
Astrology Predictions Written By :
" Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology).
Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831 Email: alandurastrologer@gmail.com