MAKARAM Yearly Rasi Palanஇனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்களோடு இந்த 2018-ல் அடி எடுத்து வைக்கும் மகர ராசி வாசகர்களே, இவ்வாண்டு உங்களுக்கு நடைபெறவிருக்கும் பலன்களை பார்ப்போம். இந்தாண்டு 2018 தொடக்கம் முதற்கொண்டு சனி பகவான் விரையச் சனியாக சஞ்சரிக்க இருப்பதால் நல்ல பலன்கள் குறைவாகவே கிடைக்கும். இந்த ஆண்டு வரவை விட செலவு அதிகமாகும். எந்த ஒரு விஷயத்தையும் நிதானமாக கையாண்டு அதில் வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தில் குழப்பங்கள் வந்து மறையும். கணவன் மனைவி உறவில் சண்டை சச்சரவு வரும். வாழ்க்கைத்துணை உடல்நலத்தில் கவனம் தேவை. எதிர்பாராத பல செலவுகள் வரும், குறிப்பாக மருத்துவ செலவுகள் ஏற்படும். மற்றவர்களிடம் விட்டு கொடுத்து போவது நல்லது. பயணங்களின் போது கவனமாக இருக்கவும். வண்டி, வாகனங்களை இயக்கும் போது கவனமாக இருக்கவும். தொழில் வகையில் சில தடைகள் வரும். பண தேவைக்காக வெளியில் கடன் வாங்குவீர்கள். நல்ல பலன்கள் கிடைக்க தெய்வ வழிபாட்டினை மேற்கொள்ளவும். எல்லாவற்றையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். நீண்ட நாளாக செல்ல வேண்டுமென்று நினைத்திருந்த புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். பூர்வீக சொத்துப் பிரச்னைக்கு சுமூக தீர்வு காண்பீர்கள். முக்கிய வேலைகளை மற்றவர்களை நம்பி ஒப்படைக்க வேண்டாம். அடிக்கடி டென்ஷன் ஆவீர்கள். குடும்பத்தில் எல்லாரிடமும் அனுசரித்து போவீர்கள். உடல் நலத்தில் கூடுதல் கவனம் தேவை. உடல் சோர்வு, பதட்டம், வீண் செலவுகள் வந்துப் போகும். மறைமுக எதிர்ப்புகள் தானாக விலகும். பயணங்களால் வீண் அலைச்சல் ஏற்படும். கடன் தொந்தரவு மனதை வாட்டும். எதிர்பாராத பயணங்கள் மேற்கொள்வீர்கள். உடன்பிறப்பு வகையில் சில அலைச்சல் இருக்கும். சொத்து வாங்குவது, விற்பதில் சில வில்லங்கம் இருக்கும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான பிரச்னைகளும், போராட்டங்களும் இருந்துக் கொண்டேயிருக்கும். அடிமனதில் ஒருவித பயமும் வந்துப் போகும். அவ்வப்போது தாழ்வுமனப்பான்மை தலைத்தூக்கும். வீட்டிலும், வெளியிலும் மற்றவர்களை அனுசரித்துப் போவது நல்லது. காரியத்தில் முழு கவனம் செலுத்தப்பாருங்கள். யாரையும் எளிதில் நம்பி ஏமாற வேண்டாம். கணவன் மனைவிக்குள் வீண் சந்தேகம், ஈகோப் பிரச்னையால் பிரிவு வரக்கூடும். உங்களுடைய திறமைக் குறைந்து விட்டதாக நீங்களே சில நேரங்களில் நினைத்துக் கொள்வீர்கள். அனுபவப்பூர்வமாகப் பேசி எல்லோரையும் கவருவீர்கள். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் வீட்டில் ஏற்பாடாகும். குழந்தை பாக்யம் கிடைக்கும். உங்கள் ஆலோசனையை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். சொத்து கைக்கு வரும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வேலைச்சுமையால் டென்ஷன் அதிகரிக்கும். உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்த முயற்சிப்பார்கள். எல்லாவற்றிற்கும் இறை வழிபாடு ஒன்றே சிறந்த பரிகாரம். பரிகாரம் : இந்த ஆண்டு முழுவது சாஸ்தாவை வணங்கி வழிபடவும். முக்கிய குறிப்பு : இந்த 2018-ல் மாதம் தோறும் வரும் சந்திராஷ்டம தினத்தில் மட்டும் சிறிது எச்சரிக்கையாக இருக்கவும்.
( For Makaram : Daily - Weekly - Monthly)
Astrology Predictions Written By :
" Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology).
Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831