SIMMAM Yearly Rasi Palanஇனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்களோடு இந்த 2018-ல் அடி எடுத்து வைக்கும் சிம்ம ராசி வாசகர்களே, இவ்வாண்டு உங்களுக்கு நடைபெறவிருக்கும் பலன்களை பார்ப்போம். இந்த 2018 ஆண்டு உங்களுக்கு சுமாரான ஆண்டாக இருக்கும். சென்ற வருடம் உடல் ஆரோக்கியம் மற்ற எல்லா விஷயத்திலும் சரி நீங்கள் பட்ட கஷ்டம் கொஞ்சம் நஞ்சம் அல்ல, அனால் இந்த ஆண்டு நிச்சயம் அப்படி இருக்காது. காரணம் சனி பகவான் ஓரளவு நன்மை தரக்கூடிய இடத்திற்கு மாறிவிட்டார். உங்களுக்கு பெரியளவில் நல்லது நடக்காவிட்டாலும் கெடுதல் நிச்சயம் நடக்காது. குரு பகவான் சாதகமான நிலையில் இல்லை. இதனால் உறவிணர்களுக்குள் கருத்து வேறுபாடு வர வாய்ப்புண்டு. கணவன் மனைவிக்குள் ஈகோ பிரச்சனை ஏற்படும். ஆண்டு தொடக்கத்தில் சிலருக்கு வெளிநாடு பயணம் ஏற்படும். மனதில் நல்ல பல சிந்தனைகள் தோன்றி தர்ம காரியங்கள் செய்ய வைக்கும். ஆன்மீக ஆர்வம் கூடும், அதனால் பல புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று நல்ல இறைவன் தரிசனத்தை பெறுவீர்கள். புதிய சொத்துக்கள் வாங்குவது, விற்பதில் நல்ல லாபம் கிடைக்கும். எந்த ஒரு இடத்திலும் வீண் விவாதங்களில் ஈடுபட வேண்டாம். வேலை தேடி அலைபவர்களுக்கு சீக்கிரத்தில் நல்ல வேலை கிடைக்கும். உத்யோகத்தில் பெயர், புகழ், பணம் இவை அனைத்தும் கிடக்கும். உத்யோகத்தில் உங்கள் திறமை வெளிப்படும். கடன் தொந்தரவு இருக்காது. கடன் உங்கள் கட்டுக்குள் இருக்கும். சுப விரைய செலவுகள் நிறைய உண்டு. வண்டி, வாகனங்களில் செல்லும் போது மிகுந்த கவனம் தேவை. பூர்விக சொத்து வழக்கில் உங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வரும். பொருளாதார வளர்ச்சி சிறப்பாக இருக்கும். பொன், பொருள், வீடு, மனை சொத்துக்கள் வாங்கும் யோகம் கூடிவரும். உங்கள் வசதி வாய்ப்புகள் பெருகும், பழைய வீட்டில் இருந்து புது வீட்டிற்கு மாற வாய்ப்புண்டு. உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வீட்டில் மருத்துவ செலவு குறையும். எதிர்பார்த்த மனநிம்மதி கிடைக்கும். சமூகத்தில் உங்கள் புகழ் அந்தஸ்து உயரும். உத்யோகத்தில் உங்கள் உழைப்புக்கு ஏற்ற சன்மானம் கிடைக்கும். எதிரிகள் கண்காணாமல் போவார்கள். குடும்பத்தில் கணவன் மனைவி அன்யோன்யம் அதிகரிக்கும். திருமண வயதில் உள்ளவர்களுக்கு வரன்கள் கூடிவரும். குழந்தை பாக்கியம் கிட்டும். உத்யோகத்தில் மேலதிகாரியின் நன்மதிப்பை பெறுவீர்கள். சக ஊழியர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பர். உங்களால் உத்யோகம் பார்க்கும் இடத்திற்கு நல்ல லாபம் வரும். கூட்டுத்தொழில் வியாபாரத்தில் புது முதலீடுகளை கவனமாக செய்யவும். குல தெய்வ வழிபாட்டினை தவறாமல் செய்வீர்கள். ஆன்மீக பெரியோர்களின் அன்பும், ஆசியும் கிட்டும். வம்பு வழக்குகளில் கவனமாக இருக்கவும். பொது சேவையில் கவனமாக இருக்கவும். நீங்கள் எடுத்துக்கொண்ட முயற்சிக்கும் உழைப்பிற்கும் நல்ல பலன் கிடைக்கும். நீங்கள் கையில் எடுத்த காரியங்கள் இனிதே நடைபெறும். தொட்டது துலங்கும், பட்டது துளிரும். குடும்பத்தில் இருந்து வந்த மருத்துவ செலவுகள் குறையும். குடும்பத்தில் இருப்பவர்கள் ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும் இருப்பர். உங்கள் செல்வாக்கு உயரும். உங்கள் சொல்படி கேட்டு நடப்பர். பணப்புழக்கம் அதிகரிக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி அதை அழகுபடுத்துவீர்கள். எல்லாவற்றிற்கும் இறை வழிபாடு ஒன்றே சிறந்த பரிகாரம். பரிகாரம் : இந்த வருடம் முழுவதும் சூரிய பகவானை வழிபடவும். முக்கிய குறிப்பு : இந்த 2018-ல் மாதம் தோறும் வரும் சந்திராஷ்டம தினத்தில் மட்டும் சிறிது எச்சரிக்கையாக இருக்கவும்.
( For Simmam : Daily - Weekly - Monthly)
Astrology Predictions Written By :
" Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology).
Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831