VIRUCHIKAM Yearly Rasi Palanஇனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்களோடு இந்த 2018-ல் அடி எடுத்து வைக்கும் விருச்சிக ராசி வாசகர்களே, இவ்வாண்டு உங்களுக்கு நடைபெறவிருக்கும் பலன்களை பார்ப்போம். இந்த 2018 புத்தாண்டு பொறுத்தவரை சிறப்பாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. உங்களுக்கு இதுவரை வந்த கஷ்டங்கள் காணாமல் போகும். தாராள பண வரவு இருக்கும். உங்கள் தேவைகள் மற்றும் குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். தடைபட்ட சுப காரியம் கைகூடும். உங்கள் மன பலம் கூடும். உங்களுக்கு எதிராக நின்றவர்கள் கூட நண்பர்கள் ஆவர். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தொழில், வியாபாரம் ரீதியாக புது வாய்ப்புகள் உருவாகும். உடன் பிறந்தவர்களின் அன்பும் ஆதரவும் கிட்டும். உங்கள் கருத்துக்கு குடும்பத்திலும் சரி வெளிலும் சரி நல்ல மதிப்பு இருக்கும். நீங்கள் சாதுர்யமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். மனோபலம் அதிகரிக்கும். பணவரவு கணிசமாக உயரும். நண்பர்கள் வகையில் ஆதரவுப் பெருகும். சிலர் சொந்தமாக வீட்டு மனை வாங்குவீர்கள். வெளிவட்டாரத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். புது வேலை தேடுபவர்களுக்கு அதிக சம்பளத்துடன் கூடிய நல்ல உத்யோகம் அமையும். உறவினர், நண்பர் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். உங்களால் பயனடைந்தவர்கள் கஷ்ட நேரத்தில் உங்களுக்கு உதவ முன் வருவார்கள். சொத்து வாங்குவது, விற்பதில் ஒரு சில சிக்கல்கள் இருக்கும். மற்றவர்களுக்காக ஜாமீன் கையெழுத்து போட்டு பிரச்சனையில் சிக்கிக்கொள்ள வேண்டாம். பழைய கடனை அடைக்க புது கடன் வாங்குவீர்கள். வீடு, மனை வாங்குவது, விற்பதில் சில சிக்கல்கள் இருக்கும். எதிலும் சுயமாக முடிவு எடுப்பீர்கள். சொத்து வழக்கில் இனி சாதகமான தீர்ப்பு வரும். உறவினர்கள் வகையில் ஆதாயமடைவீர்கள். . பெற்றோர்கள் வகையில் நன்மை உண்டாகும். பூர்விக சொத்தில் இருந்து வந்த தடைகள் வந்து நீங்கும். வேற்று மத நண்பர்களால் ஆதாயம் அடைவீர்கள். நட்பு வட்டம் விரிவடையும். உங்களின் புகழ், கௌரவம் ஒருபடி உயரும். பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். வருமானத்தை உயர்த்த புது வழிகளில் முயற்சி செய்வீர்கள். திடீர் யோகம், பணவரவு உண்டு. நீண்ட நாளாக வராமலிருந்த பணம் கைக்கு வரும். பழைய கடனில் ஒரு பாதியை அடைப்பீர்கள். மனதில் நேர்மறை எண்ணங்கள் உருவாகும். உத்யோகத்தில் பெரிய பதவிகள் தேடி வரும். தடைபட்ட வீடு கட்டும் பணியை தொடர்வீர்கள். சொந்த பந்தங்கள் மத்தியில் உயர்வாக மதிக்கப்படுவீர்கள். ஒரே நேரத்தில் பல வேலைகளை சேர்த்து பார்க்க வேண்டி வரும். ஆடம்பரச் செலவுகளை குறைக்க பார்ப்பீர்கள். பல புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். எல்லாவற்றிற்கும் இறை வழிபாடு ஒன்றே சிறந்த பரிகாரம். பரிகாரம் : இந்த ஆண்டு முழுவதும் சிவபெருமானை வழிபடவும். முக்கிய குறிப்பு : இந்த 2018-ல் மாதம் தோறும் வரும் சந்திராஷ்டம தினத்தில் மட்டும் சிறிது எச்சரிக்கையாக இருக்கவும்.
( For Viruchikam : Daily - Weekly - Monthly)
Astrology Predictions Written By :
" Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology).
Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831