 THULAM Yearly Rasi Palan
   
			THULAM Yearly Rasi Palan
            2019ல் அடியெடுத்து வைக்கும் துலாம் ராசி நேயர்களே, இந்த வருடம் முக்கிய கிரகங்களான குரு பகவான் 2-ம் வீட்டிலும், சனி பகவான் 3-ம் வீட்டிலும் சஞ்சரித்துள்ளதால் அனைத்து வகையான செல்வ சேர்க்கையும் உண்டாகும். இந்த ஆண்டு உங்களுக்கு இனிமையான ஆண்டாக அமையும். ஏழரைச்சனி பாதிப்பில் இருந்து முழுமையாக விடுபட்டதால், இதுவரை இருந்து வந்த தொல்லைகள், கஷ்டங்கள், கடன்சுமைகள் எல்லாம் குறைந்து மனநிம்மதி அடைவீர்கள். இந்த புத்தாண்டில் சனி உங்கள் ராசிக்கு பலமான இடத்தில் இருப்பதால் இனி மேல் ஏறுமுகம் தான். மனதில் நினைத்த காரியங்கள் எல்லாம் வெற்றிகரமாக முடியும். நீங்கள் எப்போதும் சொன்ன சொல்லை தவற மாட்டீர்கள். வாய்ஜாலத்தால் எதையும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை உண்டாகும். பொருளாதார நிலை சிறப்பாக இருந்து வரும். அதேநேரத்தில் ஓய்வில்லாமல் உழைக்க வேண்டியிருக்கும். குடும்பத்தினரின் நலனிலும் சிறிது அக்கறை கொள்ள வேண்டும். குடும்பத்தில் நிலவி வரும் சலசலப்பினைப் போக்கி சந்தோஷத்தை வரவழைக்க முடியும். உடன்பிறந்தோரின் நலனுக்காக செலவு செய்ய வேண்டிய சூழ்நிலை உருவாகும். புதிதாக வண்டி, வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டு. குடும்பத்தில் சுப நிகழிச்சிகள் உங்கள் தலைமையில் நடக்கும். அடிக்கடி வெளியூர் பயணம் செல்ல வேண்டிவரும். புது வீடு மாற்றம் ஏற்படும். வாடகை வீட்டில் இருந்து சொந்த வீட்டிற்கு குடி ஏறும் வாய்ப்பு வரும். பெற்றோர்கள் அனுசரணையாக இருப்பார்கள். பெரிய மனிதர்களின் ஆதரவால் நற்பயர் கிடைக்கும். கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். யாரிடமும் வீண் வாக்கு வாதத்தில் ஈடுபட வேண்டாம். தடைப்பட்ட திருமண பணிகள் மீண்டும் தொடரும். குழந்தை இல்லாதவர்களுக்கு தெய்வ அனுக்கிரகத்தால் குழந்தை பாக்கியம் உண்டு. பூர்வ புண்ணிய பாக்கியங்கள் கிட்டும். எதிர்பாராத வகையில் மருத்துவ செலவுகள் ஏற்பட வாய்ப்புண்டு. குடும்பத்துடன் ஆன்மீக பயணம் மேற்கொள்ள முடியும். கோர்ட் வழக்குகளில் எதிர்பார்த்தபடி நல்ல தீர்ப்பு வரும். பூர்விக சொத்துக்களில் இருந்த சிக்கல் தீரும். வெளிநாடு சென்று வரும் யோகம் உண்டு. உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கியே நிற்கும். உத்யோகத்தில் சக ஊழியர்களுடன் அனுசரித்து போகவும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் உருவாகும். இந்த புத்தாண்டு உங்களுக்கு கெடுதல்கள் குறைந்து நன்மைகள் பெருகும் ஆண்டாக அமையும். 
பரிகாரம் : இந்த வருடம் முழுவதும் வெள்ளிக்கிழமைகளில் சுக்கிர பகவானை வணங்கி வழிபடவும்.
முக்கிய குறிப்பு : இந்த 2019ல் மாதம் தோறும் வரும் சந்திராஷ்டம தினத்தில் மட்டும் சிறிது எச்சரிக்கையாக இருக்கவும்.            
Astrology Predictions Written By : 
" Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology).
Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831