தனுசு ராசி அன்பர்களே, 2020ஆண்டு வாழ்கை முன்னேற்றத்திற்காக மிக கடினமாக உழைக்க வேண்டும். மனதினில் தர்ம சிந்தனைகள் அதிக அளவில் இடம் பிடிக்கும். எடுத்த வேலையை முடிப்பதற்கு அலைச்சலை சந்திக்க வேண்டி இருந்தாலும் மிகுந்த ஈடுபாட்டோடு முன்நின்று எடுத்த காரியத்தை முடிக்க முடியும். முறையான அதே நேரத்தில் நிதானமான தன வரவு தொடர்ந்து இருந்து வரும். வரவிற்கும், செலவிற்கும் சரியாக இருக்கும். பண சேமிப்பது அவ்வளவு எளிதான காரியமாக இருக்காது. குடும்ப விஷயங்களில் உங்களது பங்களிப்பு மிகவும் அதிகமாக இருந்து வரும். குடும்பத்தில் மட்டும் கவனம் செலுத்தாமல் உங்கள் உடல்நிலையிலும் அவ்வப்போது அக்கறை காட்டுவது நல்லது. சிக்கலான நேரத்தில் அதிகம் பேசாமல் அமைதி காத்து இருப்பது நல்லது. உடன்பிறந்தோர் உதவி கேட்டு வருவர். உறவினர்கள் வகையில் சில பிரச்சனைகள் வர வாய்ப்புள்ளதால் சற்று விலகியே நிற்பது நல்லது. மொத்தத்தில் நிதானமான வளர்ச்சியைத் தரும் வருடமாக இருக்கும்.எதிர்பாராத நபர்களிடமிருந்து நல்லாதரவு கிடைக்கும். எல்லா விஷயங்களுக்கும் உடனடி தீர்வைக் காண முடியும். உங்கள் தன்னம்பிக்கை வளரும். பூர்வீகச் சொத்துக்களில் இருந்த பிரச்னைகள் நீங்கி அவற்றிலிருந்து வருமானம் வரத்தொடங்கும். எதிரிகள் தானாகவே அடங்கி விடுவர். குடும்ப நபர்களிடம் வாக்கு வாதத்தை தவிர்க்கவும். வாழ்கைதுணையின் ஆலோசனை பயனுள்ளதாக இருக்கும். பொருளாதார நிலை மிகவும் சவாலாக இருக்கும். பணம் வரவு இருக்கும். நீண்ட நாட்களாக தொடர்கின்ற உடல் உபதாகைகளிலிருந்த்து விடுபட முடியும். இந்த ஆண்டு பல புதுமைகள் நடக்க போகிறது. உங்க இலக்குகளை அடையும் முயற்சியில் வெற்றி .உங்களுக்கு ஏற்படும். நல்ல வாய்ப்புகள் வரிசையாக வந்து நிற்க போகிறது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குடும்பத்தின் பொருளாதார நிலையில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும். வருமானத்திற்கு எந்த குறையும் இருக்காது. தேவையற்ற அலைச்சல்களால் பொருள் விரயம், நேர விரயம் ஏற்படும். கணவன் மனைவிக்கிடையே வாக்குவாதங்கள் ஏற்படக்கூடும். பிறருக்கு கொடுத்த கடன்களை வாங்குவது சிரமாக இருக்கும். வாழ்க்கை துணை வழியில் மருத்துவ செலவுகள் ஏற்படும். பூர்விக சொத்துக்களால் சிறிது பொருள் விரயம் ஏற்படும். புதிய முயற்சிகளில் சிறிது தடை, தாமதங்களுக்கு பிறகே வெற்றி கிடைக்கும். உறவினர்கள் மற்றும் நண்பர்களின் ஆதரவு உங்களுக்கு இருக்கும். உங்களுக்கு இது நாள் வரை இருந்து வந்த நேரடி மறைமுக எதிர்ப்புகள் அனைத்தும் நீங்கும். நீண்ட தூர பயணங்களால் அதிகம் அனுகூலங்கள் ஏற்படும்.
உத்யோகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். பதவி உயர்வுகள் சிறிது தடை தாமதங்களுக்கு பிறகு கிடைக்கும். வேலை கிடைக்காதவர்கள், புதிய வேலைக்கு முயற்சிப்பவர்களுக்கு அவர்களின் தகுதிக்கேற்ற வேலை கிடைக்கும். வேலைக்காக செல்லும் பயணம் வெற்றிகரமாக முடியும். சிலருக்கு வெளிநாடு வாய்ப்பும் கிடைக்கும். ஆண்டு ஆரம்பத்தில் உங்கள் தொழிலுக்கு ஆபத்து இருக்க கூடும், ஆனால் சூழ்நிலைகள் சரியாகிவிடும். தொழில், வியாபாரம் சீரான பாதையில் செல்லும்.
பரிகாரம் : வியாழக்கிழமை தோறும் ஸ்ரீ ராகவேந்திரரை மனதார வழிபடவும்.
முக்கிய குறிப்பு : இந்த 2020ல் மாதம் தோறும் வரும் சந்திராஷ்டம தினத்தில் மட்டும் சிறிது எச்சரிக்கையாக இருக்கவும்.
Astrology Predictions Written By :
" Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology).
Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831