கன்னி ராசி அன்பர்களே, 2020ம் ஆண்டு, அதிர்ஷ்டகரமான ஆண்டாக அமையும். தடைபட்ட காரியங்கள் அனைத்தும் இவ்வாண்டு அணுகூலமாக நடைபெறும். உங்கள் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் வரும். பொருளாதார நிலை சிறப்பாக இருந்து வரும். எந்த ஒரு விஷயத்திலும் அதிகப்படியான அவசரம் ஆபத்தில் முடியும் என்பதை உணரவேண்டும். மற்றவர்களிடம் பேசும் போது வார்த்தைப் பிரயோகம் முக்கியம். எதிர்பாராத பல வழிகளிலும் பொருள்வரவு தொடரும். குடும்பத்தினரின் நலனிலும் சிறிது அக்கறை கொள்ள வேண்டியது அவசியம். ஓய்வு நேரத்தை குடும்பத்துடன் செலவழிப்பது நல்ல பலன்களை தரும். உறவினர்கள் வகையில் ஆதாயமும், அவர்களுக்கு பதில் உதவி செய்ய வேண்டிய சூழ்நிலை உருவாகும். வங்கிகள் மூலமாக எதிர்பார்த்த வங்கி கடன்கள் கிடைக்கும் மனதிற்கு மகிழ்ச்சியைத் தருகின்ற கேளிக்கைகள், கொண்டாட்டங்கள், பொழுதுபோக்கு அம்சங்கள், உல்லாசப் பயணங்கள் ஆகியவற்றை அனுபவிக்க முடியும். அடுத்தவர்களை அனுசரித்துச் செல்லும் குணம் உங்களிடம் இருக்கும். புதிய வீடு, மனை வாங்கும் யோகம் ஏற்படும். கணவன் மனைவிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் அகலும். வீண் வாக்குவாதங்களால் நேர விரயம் பொருளாதார இழப்பு நிம்மதி குறைவு ஆகியவை ஏற்படலாம். உங்களுக்கு சம்பந்தமில்லாத வேலைகளில் கவனம் செலுத்துவதை தவிர்ப்பது நல்லது. நிலுவையில் உள்ள வழக்குகள் இவ்வாண்டு இறுதிக்குள் நல்ல முடிவு வரும். வெளியில் கொடுத்த பணம் கைக்கு திரும்ப வரும். உடல்நலம் விஷயத்தில் அதிர்ஷ்டம் உங்களுடன் இருக்கும். உங்கள் காதல் வாழ்க்கையும் நன்றாக இருக்க வாய்ப்புள்ளது. உங்களின் நிதி நிலைமை சீரடையும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியை தரும். அடிக்கடி உடல்நல பாதிப்புகள் ஏற்பட்டு நீங்கும். குடும்பத்தில் இருப்பவர்களுக்கு மருத்துவ செலவுகள் செய்ய வேண்டிய சூழல் ஏற்படும். நீங்கள் ஈடுபடும் காரியங்கள் அனைத்திலும் தடைகளும், தாமதங்களும் உண்டாகும். எல்லாவற்றிலும் மிக கடின முயற்சிகள் மேற்கொண்ட பிறகே வெற்றி பெறக்கூடிய நிலையிருக்கும். சிலருக்கு குடும்ப உறுப்பினர்களுடன் மனஸ்தாபங்கள் ஏற்படலாம். மறைமுக எதிர்ப்புகளை சமாளிக்க கூடிய திறன் உண்டாகும். குடும்ப பொருளாதார நிலை ஏற்ற இறக்கமான பலன்களையே கொண்டிருக்கும். ஒரு சிலர் ஆன்மீக பயணங்களை மேற்கொள்ள வேண்டிவரும். திருமணம் போன்ற சுப காரிய முயற்சிகள் சிறிது தாமதத்திற்கு பிறகு வெற்றியடையும். ஒரு சிலர் தாங்கள் வாங்கிய பழைய கடன்களை வட்டியும், முதுலுமாக அடைக்க முடியும். வெளிநாடுகளுக்கு செல்லக்கூடிய யோகம் சிலருக்கு ஏற்படும்.
உத்யோகத்தில் சக பணியாளர்களின் உதவி, ஒத்துழைப்பு உங்களுக்கு கிடைக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்களிடம் ஈகோ பிரச்சனை வரும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். புதிய வேலை வாய்ப்புகள் மனதிற்கு மகிழ்ச்சியை தரப்போகிறது. தொழில், வியாபாரத்தில் உங்கள் சக போட்டியாளர்கள் உங்களுக்கு எதிரான செயல்களில் ஈடுபடுவர். தொழிலில் புதிதாக நீங்க செய்யும் முதலீடுகள் உங்களுக்கு இரட்டிப்பு லாபத்தை தரும். ஒரு சிலருக்கு தொழில் நிமித்தமாக அடிக்கடி தொலைதூர பயணங்கள் மேற்கொள்ள வேண்டிவரும்.
பரிகாரம்: உங்கள் கஷ்டங்கள் தீர வருடம் முழுவதும் திருநீர்மலையில் உள்ள ரங்கநாத பெருமாளை வணங்கி வழிபடவம்.
முக்கிய குறிப்பு : இந்த 2020ல் மாதம் தோறும் வரும் சந்திராஷ்டம தினத்தில் மட்டும் சிறிது எச்சரிக்கையாக இருக்கவும்
துலாம்
Astrology Predictions Written By :
" Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology).
Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831