கடக ராசி அன்பர்களே, 2020ம் ஆண்டின் தொடக்கத்திலிருந்தே நன்மையான பலன்கள் உங்களுக்கு அதிகம் ஏற்படும். நீங்கள் இந்த வருடத்தில் மனமகிழ்ச்சியோடு இருக்க பல வழிகள் கிடைக்கும். தேவையற்ற சிந்தனைகள் உங்களை விட்டு அகலும். மனக்குழப்பங்கள் நீங்கி நிம்மதியாக இருக்க முடியும். குடும்ப செலவுகளைக் கட்டுக்குள் கொண்டு வர முடியும். வீட்டில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். உடன்பிறந்தோரால் குறிப்பிடத்தகுந்த ஆதாயத்தினைக் பெற முடியும். சொத்துப் பிரச்னைகள், பாகப்பிரிவினை சம்பந்தப்பட்ட விவகாரங்கள் உங்களுக்கு சாதகமாக ருக்கும். அறிமுகம் இல்லாதவர்களால் ஏமாற்றப்படும் வாய்ப்பு உள்ளதால் பிரயாணத்தின் போது மிகுந்த கவனத்துடன் இருக்கவும். விலகியிருந்த சொந்தங்கள் உங்கள் உதவியை நாடி வருவர். குடும்பத்தினரோடு பொழுதினைக் கழிப்பதில் அளவற்ற மகிழ்ச்சி கிடைக்கும். பெற்றோர் நலனிலும் அக்கறை கொள்ளுதல் நல்லது. எந்தப் பிரச்னை குறித்தும் அதிகம் அலட்டிக் கொள்ளாமல் மன நிம்மதியுடன் இந்த வருடம் நிறைவாகச் செல்லும். பொருளாதாரத்தில் முன்னேற்ற சூழ்நிலை உண்டு. குடும்பத்தில் சுபமங்கள காரியங்கள் நிறைவேறும். வெகுகாலம் எதிர்பார்த்திருந்த தனவரவு தானாகவே வந்து சேரும். வாழ்வில் நடக்கும் அனைத்து சம்பவங்களும் உங்களுக்கு அனுபவம் தரும் வகையில் அமைந்திருக்கும். தீராத கடன் பிரச்சனை தீரும். பூர்வீக சொத்துக்கள் மூலம் பலன் கிடைக்கும். உறவினர்களுடன் இருந்து வந்த கருத்து மோதல்கள் சரியாகும். வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும். ஆரோக்கியமாக இருக்க விரும்பினால், ஆண்டின் தொடக்கத்தில் இருந்து சீரான உணவு பழக்கத்தை கடைப்பிடிக்கவும். உங்கள் காதல் விஷயங்கள் இந்த ஆண்டு மிகவும் நன்றாக இருக்கும். ஒரு சிலருக்கு அவர்கள் விரும்பிய நபர்களையே திருமணம் செய்து கொள்ளும் யோகம் ஏற்படும். குடும்ப வாழ்க்கையும் நன்றாக இருக்கும். தொட்டதெல்லாம் துலங்கும் பொன்னான ஆண்டாக இருக்க போகிறது. உடல் நலம் சிறப்பாக இருக்கும். மனதில் புதிய உற்சாகம் பிறக்கும். உங்களுக்கு பண வரவு தாராளமாக இருக்கும். திருமணம் நடக்காமல் இருந்த ஆண், பெண் இருபாலருக்கும் இந்த ஆண்டு நிச்சயம் திருமணம் நடக்கும். கணவன் மனைவிக்கிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி அன்யோன்யம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். வீட்டில் நீண்ட நாட்களாக தாமதமான சுபநிகழ்ச்சிகள் சீக்கிரத்திலேயே நடக்கத் தொடங்கும். புதிய வீடு, மனை, வாகனங்கள் வாங்குவீர்கள். உடன்பிறப்புகளிடம் இருந்து வந்த சொத்து பிரச்சனைகள் அனைத்தும் சுமூகமாக தீரும். உறவினர்கள் மத்தியில் உங்களுக்கு செல்வாக்கும், மதிப்பும் ஏற்படும். விலகி சென்ற உறவுகள், நண்பர்கள் உங்களை தேடி வந்து உறவு கொண்டாடுவர். திட்டமிட்ட பயணங்கள் நல்ல லாபத்தை கொடுக்கும். புதிய ஆடை மற்றும் ஆபரணங்களை வாங்க முடியும்.
நீண்ட நாட்களாக வேலை தேடி அலைந்தவர்களுக்கு நல்ல வருமானம் உள்ள வேலை கிடைக்கும். உங்கள் பணிகளில் ஊதிய உயர்வு, பணியிட மாற்றம் மற்றும் பதவி உயர்வு ஆகியவை நீங்கள் விரும்பிய படியே கிடைக்கும். புதிய தொழில் வாய்ப்புகள் உருவாகும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும்.
பரிகாரம் : இந்த ஆண்டு முழுவதும் பெண் தெய்வ வழிபாடு உங்கள் ராசிக்கு சிறப்பான பலனை கொடுக்கும்.
முக்கிய குறிப்பு : இந்த 2020ல் மாதம் தோறும் வரும் சந்திராஷ்டம தினத்தில் மட்டும் சிறிது எச்சரிக்கையாக இருக்கவும்.
Astrology Predictions Written By :
" Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology).
Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831