கும்பம் ராசி அன்பர்களே, 2020 ஆம் ஆண்டில் பல சவால்களை எதிர்கொள்ள வேண்டிவரும். எதையும் சாதிக்க நம்மால் முடியும் என்ற தன்னம்பிக்கை உணர்வு அதிகரிக்கும். அநாவசிய செலவுகள் குறையும். குடும்பத்தில் பொருள் சேர்க்கை உண்டாகும். தடைப்பட்டு வந்த சுபகாரியங்கள் நடைபெறத் துவங்கும். கடன்சுமை குறையும். புதிய வீடு கட்டும் முயற்சியில் உள்ளோருக்கு நேரம் சாதகமாக அமையும். உடன்பிறந்தோர் உங்களுக்கு உதவி செய்ய தயாராக இருப்பர். விலகியிருந்த சொந்தங்கள் உங்களிடம் வந்து சேர்வர். இந்த வருடத்தில் உங்கள் வாழ்நாள் லட்சியமாக நினைத்து வந்த காரியத்தை செய்து முடிப்பீர்கள். மொத்தத்தில் நற்பலன்களைத் தருகின்ற வருடமாக இருக்கும்.பொருளாதாரத்தில் வளர்ச்சி உண்டகும். தெய்வ வழிபாட்டில் நாட்டம் அதிகரிக்கும். தள்ளி வைத்திருந்த காரியங்களைச் செய்ய முடியும். பெற்றோருடன் இணக்கமான உறவு உண்டாகத் தொடங்கும். உங்களுடைய தெளிவான எண்ணங்களால் குடும்பத்தில் உங்களின் மதிப்பு மரியாதை உயரும். உங்கள் ஆரோக்கிய விஷயத்தில் கவனம் தேவை. நீங்கள் ஒரு பயணத்திற்குச் சென்றால், வருமானம் அதிகரிப்பதால், செலவுகளும் அதிகரிக்கும். ஆன்மீகம் தொடர்பான பல நல்ல அனுபவங்கள் கிடைக்கும். உடன் பிறந்தவர்களால் பொருளாதார ரீதியில் லாபம் கிடைக்கும். உடல் மற்றும் மனம் உற்சாகமாகவும், சுறுசுறுப்பாகவும் இருக்கும். மனதில் இருந்து வந்த குழப்பங்களும், வீண் கவலைகளும் நீங்கும். கணவன் மனைவிக்கிடையே இருந்த மனஸ்தாபங்கள் நீங்கி அன்பும், அன்னோன்யமும் பெருகும். குடும்பத்தின் அனைத்து தேவைகளையும் பூர்த்தியாகும். ஒரு சிலர் குடும்பத்தோடு உல்லாச பயணங்கள் செல்ல விருப்பம் ஏற்படும். புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும். பணவரவுகளில் சிறிது தாமதம் ஏற்படும் என்றாலும் முழுமையான தொகை உங்களுக்கு வந்து சேரும். இது வரை இருந்து வந்த மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். வீட்டில் சுப காரியங்களுகான செலவுகள் அதிகரிக்கும். உறவினர்கள் வீட்டு விசேஷங்களில் கலந்து கொண்டு சிறப்பிக்க முடியும். வெளிநாடு சென்று வரும் யோகம் உண்டு.சமுதாயத்தின் பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். அதன் மூலம் பல ஆதாயங்கள் உங்களுக்கு ஏற்படும். உறவினர்களால் தன லாபம் உண்டாகும். பொருள் வரவு ஏற்ற இறக்கமாக இருக்கும். குடும்பத்தினரின் தேவைகளை பூர்த்தி செய்ய முடியும். சிலருக்கு புதிய வீடு, வாகனம் வாங்கும் யோகம் ஏற்படும்.
உத்யோகத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டுகளும் நன்மதிப்புகளும் கிடைக்கும். சக ஊழியர்கள் உங்களை வெகுவாக பாராட்டுவர். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபங்களை பெற முடியும். தொழில், வியாபாரத்திற்கு வாங்கிய கடன்கள் அனைத்தையும் அடைக்க முடியும். புதிதாக தொடங்கும் எந்த ஒரு முயற்சிகளிலும் கடின முயற்சிக்கு பின் வெற்றி கிடைக்கும்.
பரிகாரம் : கால பைரவரை வணங்கி வழிபட உங்கள் கஷ்டங்கள் தீரும்.
முக்கிய குறிப்பு : இந்த 2020ல் மாதம் தோறும் வரும் சந்திராஷ்டம தினத்தில் மட்டும் சிறிது எச்சரிக்கையாக இருக்கவும்.
மீனம்
Astrology Predictions Written By :
" Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology).
Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831