மகர ராசி அன்பர்களே, 2020ஆண்டு பல புதிய திட்டங்களை தீட்டி அதை செயல்படுத்த முடியும். மனதில் இருந்துவந்த விரக்தியான எண்ணங்கள் காணாமல் போகும். வரும் சோதனைகளை எல்லாம் சாதனைகளாக மாற்றிக்கொள்ள முடியும். அடுத்தவர்கள் நலனுக்காக அதிகம் உழைக்க வேண்டி இருக்கும். வரவிற்கு முன்னர் செலவுகள் காத்திருக்கும். முன்பின் தெரியாத நபர்களிடம் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. உறவினர்களின் வழியில் சாதகமான பலன்களைக் எதிர்பார்க்கலாம். வண்டி, வாகனங்களின் பராமரிப்பு செலவு அதிகரிக்கும். குடியிருக்கும் வீட்டினில் தற்போது மாற்றம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. குடும்பத்தில் பொறுப்புகளும் அதிகரிக்கும். உடல்நலத்தில் தகுந்த அக்கறை காட்ட வேண்டும். வழக்கு தொடர்பான விவகாரங்களில் உங்கள் மனம் விரும்பும் படியான வெற்றிகள் கிடைக்கும். பொருளாதாரத்தில் மேல் நிலை உண்டாகும். புதிய முயற்சிகளை வெற்றியுடன் தொடங்க முடியும். உங்களின் தன்னம்பிக்கை உயரும். புத்திக் கூர்மையுடன் சமயோஜிதமாக யோசித்து நல்ல முடிவுகளை எடுப்பீர்கள். பொது நலத் தொண்டுகளில் ஆர்வம் கூடும். உங்களின் செல்வாக்கு உயரும். உங்களைச் சுற்றிலும் ஒரு நண்பர் கூட்டம் இருக்கும். பெற்றோருக்கு ஏற்பட்ட உடல் உபாதைகள் தீரும். கடுமையாக உழைத்து எதிர்காலத்தை வளமாக்கிக் கொள்ள முடியும். காதல் கைகூடி திருமணத்தில் முடியும். திருமணமாகாதவர்களுக்கு இந்த ஆண்டு திருமணம் செய்து கொள்ளலாம். குடும்ப வாழ்க்கை ஒரு பெரிய அளவிற்கு நன்றாக இருக்கும். உடல் நிலை சிறப்பாக இருக்கும். உங்கள் குடும்பத்தில் இருந்து வந்த பொருளாதார நெருக்கடி நிலை மாறி அதிக பொருள் வரவு இருக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க முடியும். ஆடம்பர செலவுகளை தவிர்க்கவும். வாங்கிய கடன்கள் அனைத்தையும் அடைக்க முடியும். நீண்ட நாட்களாக தள்ளிப்போன சுபகாரியங்கள் அனைத்தும் ஒவ்வொன்றாக நடைபெற தொடங்கும். உங்களின் பூர்வீக சொத்துகளிலிருந்த பிரச்சனைகள் அனைத்தும் விலகும். கோர்ட் வழக்குகளில் உங்களுக்கு சாதகமான நிலை ஏற்படும். பிரிந்து சென்ற உறவினர்களும், நண்பர்களும் உங்களை தேடிவந்து சொந்தம் கொண்டாடுவர். குடும்பத்தினர் வழியில் மருத்துவ செலவுகள் ஏற்படும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை ஏற்படும். உங்கள் நண்பர்களால் பொருள்வரவு ஏற்படும். வெளிநாடுகள் செல்வது சம்பந்தமான முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும்.
உத்யோகத்தில் உங்கள் தகுதிக்கேற்ற வேலை கிடைக்கும். உத்யோக இடத்தில் எதிர்பார்த்த பதவி உயர்வுகளும், ஊதிய உயர்வுகளும் கிடைக்கும். பணியிடங்களில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு உங்களுக்கு முழுவதுமாக கிடைக்கும். தொழில், வியாபாரம் தொடக்கத்தில் நன்றாக இருக்கும். தொழில், வியாபாரத்தில் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளது. புதிய தொழில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.
பரிகாரம் : சனிக்கிழமைகளில் சனீஸ்வரனை தீபமேற்றி வழிபடவும்.
முக்கிய குறிப்பு : இந்த 2020ல் மாதம் தோறும் வரும் சந்திராஷ்டம தினத்தில் மட்டும் சிறிது எச்சரிக்கையாக இருக்கவும்.
Astrology Predictions Written By :
" Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology).
Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831