மீனம் ராசி அன்பர்களே, 2020 இந்த ஆண்டு, ராசி பலன் 2020 ஆண்டு பொருளாதார நிலை வலுவாக இருக்கும். நற்காரியங்களைப் பொறுத்து பணவரவு ஏற்படும். தெய்வ வழிபாட்டில் ஈடுபட்டால் நன்மை உண்டாகும். புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். பழைய நண்பர்களுடன் நல்ல உறவு ஏற்படும். சொத்து பிரச்சினைகள் தொடர்பாக குடும்பத்தில் தகராறு ஏற்படலாம். பல விதமான நன்மைகளை தரும் ஆண்டாக இருக்க போகிறது. வருமானம் சிறப்பாக இருந்தாலும் ஆடம்பர செலவுகள் அதிகரிக்கும். கேளிக்கைகள், கொண்டாட்டங்கள், பொழுதுபோக்கு அம்சங்களுக்காக கூடுதலாக செலவு செய்ய வேண்டிவரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். வங்கி சார்ந்த கடனுதவி கிட்டும். அதே நேரத்தில் கடனாகப் பெறும் தொகையை முக்கிய காரியங்களுக்கு பயன்படுத்த வேண்டியது அவசியம்.உடல்நலத்தில் சிறிய அளவில் பாதிப்புகள் ஏற்படும் என்றாலும் கடுமையான பாதிப்புகள் எதுவும் ஏற்படாது. கடந்த காலங்களில் பட்ட கஷ்டங்கள் அனைத்தும் தீரும். திருமணமாகி பிரிந்து வாழ்ந்து வந்த தம்பதிகள் ஒன்று சேருவர். உறவினர்களுடன் நிலவி வந்த பகைமை தீரும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். குடும்பத்தினர் விரும்பிய பொருட்கள் அனைத்தையும் வாங்க வழி கிடைக்கும். திருமண முயற்சிகள் வெற்றி பெற்று நல்ல முறையில் திருமணம் நடக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். வீண் விரயங்களைத் தவிர்த்து முடிந்த வரை சேமித்துவைப்பது நல்லது. கடன்சுமை வெகுவாகக் குறையும். பழைய சொத்து ஒன்றினை நல்ல ஆதாயத்திற்கு விற்று லாபம் காண்பீர்கள். சொன்ன சொல்லைக் காப்பாற்ற வேண்டும் என்பதில் மிகுந்த அக்கறை எடுத்துக்கொள்வதால் நற்பெரை அடைவீர்கள். உடல்நிலையைக் கருத்தில் கொண்டு உணவுப்பழக்கத்தில் கட்டுப்பாட்டுடன் இருப்பது நல்லது. உடன்பிறப்புகளால் தொல்லைகள் உருவாகும். அறிமுகமில்லாத புதிய மனிதர்களிடம் மிகுந்த எச்சரிக்கையுடன் பழகி வருவது நல்லது.
புதிய வாகனங்கள் வாங்கும் யோகம் சிலருக்கு ஏற்படும். தொலைதூர பயணங்களை மேற்கொள்ள வேண்டிவரும். வெளிநாட்டு பயணங்களால் ஆதாயம் உண்டு.
உத்யோகத்தில் நீண்ட நாள் கோரிக்கைகள் கைகூடும். வேலை தேடி அலைந்தவர்களுக்கு அவர்கள் விரும்பிய இடத்தில் வேலை கிடைக்கும். உத்யோகம் தொடர்பான வெளிநாட்டு பயணம் ஆதாயம் தரும். தொழில், வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிடைப்பதால் நல்ல லாபத்தை பெற முடியும். தொழில், வியாபாரத்தில் கடும் போட்டி இருக்கும். நீங்கள் உங்கள் வேலையை விட்டுவிட்டு, உங்கள் சொந்த தொழிலைத் தொடங்கலாம்.
பரிகாரம் : வியாழக்கிழமைகளில் விரதமிருந்து குரு பகவானை மனதார வணங்கி வழிபடவும்.
முக்கிய குறிப்பு : இந்த 2020ல் மாதம் தோறும் வரும் சந்திராஷ்டம தினத்தில் மட்டும் சிறிது எச்சரிக்கையாக இருக்கவும்.
Astrology Predictions Written By :
" Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology).
Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831