MESHAM Yearly Rasi Palan
மேஷ ராசி அன்பர்களே, இந்த 2020 புத்தாண்டு சென்ற ஆண்டைவிட சிறப்பாக இருக்கும் என்பதில் சந்தேகம் கொள்ள தேவையில்லை. பணப்புழக்கம் நன்றாக இருக்கும். எதிர்பார்த்த பல நல்ல திருப்பங்கள் ஏற்படும். மனதில் நினைத்த காரியங்களை, உடனுக்குடன் செய்து முடிப்பீர்கள். முறையான ஆலய வழிபாடுகளை மேற்கொண்டு வாழ்வில் முன்னேற்றம் அடைவீர்கள். இந்த வருடம் ஏற்றமும், மாற்றமும் உங்களைத் தேடிவரும். கூட்டு முயற்சிகளில் இருந்து விடுபட்டு தனித்து செயல்படுவீர்கள். பொருளாதார முன்னேற்றம் உண்டு. வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருள்கள் வாங்குவீர்கள். அதிகமாக கடன் வாங்காமல் இருந்தால் நன்மை உண்டாகும். புதிய தொழில் முயற்சி நல்ல பலனை தரும். தந்தை வழி சொத்துக்களில் பலன் உண்டாகும். உடன்பிறந்தவர்களிடம் மனஸ்தாபம் ஏற்படாமல் இருக்க அவர்களை அனுசரித்து செல்லவும். இது நாள் வரையில் ஏற்பட்டு வந்த தடைகள் அகலும். உத்யோகம் தொழில், வியாபாரம் போன்றவற்றில் அதிக அலைச்சல் உண்டானாலும் இறுதியில் நல்லதே நடக்கும். மனதில் புதிய எண்ணங்கள் உதயமாகும். தாயாரின் உடல் நலத்தில் கவனம் காட்டவும். பொழுது வாழ்வில் முன்னோக்கிச் செல்வீர்கள். வம்பு வழக்குகள் தீரும். குடும்பத்தில் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் அகலும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். இழந்த சொத்துக்களை திரும்ப பெறும் வாய்ப்பு உண்டு. கடன் பிரச்சினைகள் தீரும். உடல் ஆரோக்கியம் சீராகும். வீடு கட்டுவதில் இருந்த தடை அகலும். புது வீடு கட்டி அல்லது வீடு வாங்கிக் அதில் குடி ஏறுவீர்கள். உத்யோகத்தில் இருந்த மந்த நிலை மாறும். நண்பர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருந்து உதவிக்கரம் நீட்டுவர். உங்களுடைய திறமையை வெளிப்படுத்த நல்ல சந்தர்ப்பங்கள் அமையும். நீங்கள் கேட்ட இடத்தில் கேட்ட தொகை கிடைக்கும். உங்களுக்கு வந்த துயரங்களை திறமையாக சமாளிக்கவும், வருங்கால முயற்சிகளில் வெற்றி கிடைக்கவும் குரு பார்வை கைகொடுக்கும். திருமண வாய்ப்புகள் கைகூடும். குடும்ப ஒற்றுமை பலப்படும். மனதில் இருந்த பாரம் குறைந்து மகிழ்ச்சி கூடும். உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கவில்லையே என்ற ஆதங்கம் விலகும். வாங்கிய கடனைக் கொடுத்து மகிழ்வீர்கள். பொருள் சேர்க்கை ஏற்படும். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். தந்தை வழி உறவில் இருந்த விரிசல்கள் அகலும். பூர்வீகச் சொத்து சம்பந்தமாக புதிய திருப்பங்கள் ஏற்படும். குடும்பத்தில் சுப காரியங்கள் நிறைய நடைபெறும். உடன்பிறந்தவர்களால் ஒற்றுமை பலப்படும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்பட்ட தொல்லை நீங்கும். புதிய வாகனம் வாங்கும் அமைப்பு உண்டு. கணவன் மனைவிக்குள் கனிவும், பாசமும் கூடும். மனக் கவலை காணாமல் போகும். உங்கள் எதிர்கால நலன் கருதி எடுக்கும் புதிய முயற்சிகளில் அனுகூலம் உண்டு. எல்லாவற்றிற்கும் இறை வழிபாடு ஒன்றே சிறந்த பரிகாரம்.
உத்யோகத்தில் புகழ், கௌரவம், அந்தஸ்து, உயர்வு ஏற்படும். உண்மையான செயல்பாட்டிற்கும் கடினமான உழைப்புக்கும் நல்ல பலன் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர்பதவிக்காக எடுத்த முயற்சிகள் கைகூடும். சிறிய முதலீட்டில் புதிய தொழில் ஒன்றை தொடங்கி அதில் ஜெயிப்பீர்கள். கமிஷன் தொழிலில் சில ஏமாற்றங்கள் வரும். தொழில், வியாபாரம் சீராக நடைபெறும். உத்தியோகத்தில் பதவி உயர்வும், ஊதிய உயர்வும் ஏற்படும். மேலதிகாரிகள் உங்களுக்கு ஆதரவாக இருப்பர்.
பரிகாரம் : சஷ்டி விரதம் இருந்து முருகரை மனதார வணங்கி வழிபடவும்.
முக்கிய குறிப்பு : இந்த 2020ல் மாதம் தோறும் வரும் சந்திராஷ்டம தினத்தில் மட்டும் சிறிது எச்சரிக்கையாக இருக்கவும்.
Astrology Predictions Written By :
" Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology).
Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831