மிதுன ராசி அன்பர்களே, 2020 ஆம் ஆண்டு உங்கள் செயல்கள் அனைத்தும் வெற்றிப் பாதையை நோக்கியே இருக்கும். எண்ணிய எண்ணங்கள் யாவும் கைகூடும். எல்லா காரியத்திலும் நிதானமாகச் செயல்பட வேண்டியது அவசியம். நண்பர்களில் நல்லவர் தீயவரைப் கண்டுகொள்ளுதல் அவசியம். கொடுத்த வாக்கினைக் காப்பாற்ற மிகவும் சிரமப்பட வேண்டியிருக்கும். அவசரப்பட்டு யாருக்கும் வாக்கு கொடுத்துவிட வேண்டாம். அதேபோல, அடுத்தவர்களுக்கு உதவி செய்யப்போய் சிறிதும் சம்பந்தமில்லாத விஷயத்தில் நீங்கள் மாட்டிக்கொண்டு அவஸ்தைப்படும் வாய்ப்பும் உள்ளது. நாம் உண்டு, நம் வேலை உண்டு என்று இருப்பது நல்லது. அடுத்தவர்களுக்காக பொறுப்பினை ஏற்றுக் கொள்வதையும், தனது பொருளை அடமானம் வைத்து கடன்களை அடைப்பதை முடிந்த வரை தவிர்க்கவும். அவ்வாறு செய்யும் பட்சத்தில் பொருளிழப்பு உண்டாவதை தவிர்க்க முடியாது. குடும்பத்தில் உள்ள பெரியவர்களின் உடல்நிலையில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். வாகன பராமரிப்பு செலவு கூடும். வீடு, வாகனத்தை மாற்ற வேண்டிவரும். எதிலும் நிதானித்துச் செயல்பட்டால் வெற்றி நிச்சயம். வீடு, வாகனம், ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். எதிரிகளால் ஏற்படும் துன்பங்கள் மேலோங்கினாலும், சமரச பேச்சால் நல்ல சூழ்நிலை உருவாகும். வாழ்க்கைத் துணையுடன் ஏற்படும் பேச்சுகளில் நிதானத்தைக் கடைபிடிக்க வேண்டும். உடல் உஷ்ணம் தொடர்பான தொந்தரவு இருக்கும். உடல் நலம் மேம்படும். வெளிநாடுகளுக்கு பயணம் செய்யும் சூழ்நிலை உருவாகும். உங்கள் பொருளாதார நிலைமை மிகவும் வலுவாக இருக்கும். வாழ்க்கையில், நீங்கள் பல வகையான ஏற்ற தாழ்வுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் பிரச்சனைகள் வராமல் இருக்க விட்டுக்கொடுத்து போகவும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை சிறிது காலம் தள்ளி வைப்பது நல்லது. பண விவகாரங்களில் உங்களுக்கு நெருக்கமானவ்ரகள் உங்களை மோசம் செய்ய வாய்ப்புள்ளது. ஓயாத பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். பிறர் செய்த தவறுகளுக்காக நீங்கள் அவப்பெயரை சம்பாதிக்க கூடிய நிலை உருவாகும். பணம் சம்பந்தமான விசேஷங்களில் பிறரை நம்புவதையும், பிறருக்கு கடன் கொடுப்பதையும் தவிர்ப்பது நல்லது. சிலர் தெய்வீக காரியங்களில் ஈடுபடுவார்கள். திருமணம் போன்ற சுப காரியங்கள் நடைபெறும். நீண்ட நாட்களாக நீடித்து வந்த வழக்குகளில் உங்களுக்கு சாதகமாக தீர்ப்புகள் வரும். நீண்ட நாட்களாக இருந்த நோய்கள் தீரும். குடும்பத்தின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியும். நேரடி மற்றும் மறைமுக எதிரிகள் விலகி நிற்பர். பெரிய மனிதர்களின் நட்பும் அதனால் ஆதாயமும் உண்டாகும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு இதுவரை இருந்து வந்த திருமணத் தடை நீங்கும். குழந்தை பாக்கியமில்லாதவர்களுக்கு குழந்தை பிறக்கும்.
உத்யோகத்தில் உடன் பணிபுரிபவர்களிடம் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் அனுகூலங்கள் ஏற்படும். தொழில், பணியிடங்களில் சிலருக்கு பிரச்சனைகள் ஏற்படும் என்றாலும் அவை சுமூகமாக தீர்ந்து விடும். தொழில், வியாபாரத்தை விரிவு படுத்தும் முயற்சிகள் வெற்றி பெறும். தொழில், வியாபாரத்தில் போட்டி கடுமையாக இருக்கும். ஆண்டின் தொடக்கத்தில் மிகுந்த லாபங்கள் எதையும் நீங்கள் பெற முடியாது என்றாலும், நஷ்டம் ஏற்படாது.
பரிகாரம் : ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சாற்றி வணங்கி வழிபடவும்.
முக்கிய குறிப்பு : இந்த 2020ல் மாதம் தோறும் வரும் சந்திராஷ்டம தினத்தில் மட்டும் சிறிது எச்சரிக்கையாக இருக்கவும்.
கடகம்
Astrology Predictions Written By :
" Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology).
Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831