ரிஷப ராசி அன்பர்களே, 2020 வருடத்தின் துவக்கம் சற்று சிரமாக அமைந்தாலும் போகப்போக நடப்பவை எல்லாம் நன்மையாகவே முடியும். நினைத்த காரியங்களை அமைதியாக நியாயமான முறையில் சாதித்து வருவீர்கள். இது வரை இருந்த பதற்ற நிலை நீங்கி திடீர் உற்சாகம் ஏற்படும். நீங்கள் மற்றவர்களிடம் பேசும்போது மிகுந்த நிதானம் காட்ட வேண்டும். அலைச்சல் அதிகமானாலும் தனலாபம் என்பது நன்றாக அமையும். மற்றவர்களை கவரும் வகையிலான பேச்சு திறமை உங்களுடைய மிகப்பெரிய பலமாக இருக்கும். பொருள் வரவை பொறுத்தவரை சிறப்பாகவே இருக்கும். சொத்து விவகாரங்களில் முன்பின் தெரியாதவர்களால் ஏமாற்றப்படும் வாய்ப்பு உள்ளதால் அவசரப்படாமல் நிதானமாக செயல்படுவது நல்லது. உங்கள் நேரம் நன்றாக இருந்தாலும் கடன் கொடுக்கல் வாங்கலில் எதிரிகள் உண்டாகும் வாய்ப்பு உள்ளது. பணத்தை மிக கவனமாக கையாள வேண்டும். உடல் ஆரோக்கியம் பெறவும், ஆயுள் விருத்தி அடையவும் கிரகங்கள் அனுகூலமாக உள்ளன. தெய்வ வழிபாட்டால் விரய செலவுகளை தவிர்க்கலாம். திருமண வாழ்க்கை இனிமையாக இருக்கும், குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். தேவையற்ற பயணங்களால் உடல் மற்றும் மனம் களைப்படையும். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் எழும். எதிலும் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. தடைபட்டு கொண்டிருந்த காரியங்கள் அனைத்தும் ஒவ்வொன்றாக நிறைவேறும். புத்திர பாக்கியம் இல்லாதவர்களுக்கு விரைவில் புத்திர பாக்கியம் உண்டாகும். ஒரு சிலருக்கு புதிய வீடு, வீட்டு மனை மற்றும் அசையா சொத்துக்களை வாங்கும் யோகம் உண்டாகும். உடல் நலத்தில் அவ்வப்போது சிறு சிறு பாதிப்புகள் உண்டாகி மறையும். குடும்பத்தின் பொருளாதார நிலை நன்றாகவே இருக்கும். குடும்பத்திற்கு தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்க முடியும். பொன், பொருள், ஆபரண சேர்க்கை உண்டாகும். புதிய வீடு, வாகனங்கள் வாங்கும் யோகம் நிறைவேறும். கோர்ட் வழக்குகளில் தாமதங்கள் ஏற்பட்டாலும் முடிவு உங்களுக்கு சாதகமாகவே இருக்கும். திருமணம் போன்ற சுப காரியங்கள் முயற்சிகளில் வெற்றி உண்டாகும். பணம் கொடுக்கல் வாங்கல் தாராளமாக நடைபெறும். புதிய வாய்ப்புகள் மூலம் நற்பலன்களையும் லாபங்களை பெற முடியும். பிறருடன் பேசும் போது வார்த்தைகளில் கவனம் அவசியம். உற்றார், உறவினர்களின் உதவிகள் கிடைக்கும்.
இந்த ஆண்டு உங்கள் வாழ்க்கையை மாற்றக்கூடிய வேலை கிடைக்கும். வேலை தேடி அலைபவர்களுக்கு நல்ல வேலைவாய்ப்பு அமையும். ஒரு சிலருக்கு புதிய இடங்களுக்கு இடமாறுதல்கள் ஏற்படும். உத்யோகத்தில் எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் உங்களை சுற்றி இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உங்கள் தொழில், உங்க நிதி நிலைமை அதிக அற்புதமாக அமையப் போகிறது. உங்களுக்கு அதிர்ஷ்டகரமான ஆண்டாக அமையப் போகிறது.
பரிகாரம் : குல தெய்வ வழிபாடு எல்லா வகையிலும் சிறப்பை தரும்.
முக்கிய குறிப்பு : இந்த 2020ல் மாதம் தோறும் வரும் சந்திராஷ்டம தினத்தில் மட்டும் சிறிது எச்சரிக்கையாக இருக்கவும்.
Astrology Predictions Written By :
" Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology).
Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831