சிம்ம ராசி அன்பர்களே, 2020 ஆண்டு உங்களுக்கு நல்ல பெயர் கிடைக்க போகிறது. உங்களின் உழைப்புத் திறனை வெளிப்படுத்துகின்ற வகையில் வாய்ப்புகள் தேடி வரும். உங்களது செயல்கள் வேகமாகவும், விவேகத்துடனும் இருக்கும். எடுத்த வேலையை முடிக்கும் வரை கவனம் சிதறாத வகையில் மனதினை ஒருமுகப்படுத்தி செயல்பட்டால் வெற்றி நிச்சயம். அநாவசியமான செலவுகளைக் கட்டுப்படுத்த முயற்சிப்பது நல்லது. பண சேமிப்பில் கவனம் செலுத்தவும். நிலுவையில் உள்ள கடன்பிரச்னைகள் குறையும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த வங்கிக்கடன்கள் கிடைக்க வாய்ப்புண்டு. பொருளாதார நிலை சிறப்பாக இருந்து வரும். தூரத்து பிரயாணங்களின் போது புது நபர்களிடம் மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. பொதுப்பிரச்னைகளில் ஈடுபடாமல் சற்று ஒதுங்கி நிற்பது நல்லது. எந்த ஒரு செயலும் உங்களது முயற்சியினால்தான் வெற்றி பெறும் என்பதை நன்கு உணர முடியும். குடும்பத்தில் நிறைவேற்ற வேண்டிய கடமைகள் உங்களை சுற்றி சுற்றி இருக்கும். பயணங்களால் அலைச்சல் அதிகமானாலும் கூட அவை அதிர்ஷ்டத்தைத் தருவதாகவே இருக்கும். பொருளாதாரத்தில் தன்னிறைவு ஏற்படும். புதிய வாகனம் வாங்கவும் வீடு, மனைகள் வாங்கவும் மிகவும் நல்ல காலகட்டமிது. குடியிருக்கும் வீட்டினை சீர் செய்ய வாய்ப்புகள் வந்து சேரும். குலதெய்வ அருள் கிடைக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல இடத்தில் திருமண வாய்ப்பும், குழந்தை பாக்கியமும் கிட்டும். எதிரிகளின் இன்னல்கள் குறைந்து ஏற்றமான நிலை உண்டாகும். கணவன் மனைவிடையே நல்ல இணக்கமான சூழல் இருக்கும். தேக ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் வரும். புது வீடு வாங்கும் யோகம் அமையும். பணம் சம்பாதிக்க அதிக முயற்சிகள் செய்ய வேண்டியிருக்கும். உங்களின் வலிமையை உணர முடியும். உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். மண வாழ்க்கையும் காதல் வாழ்க்கையும் அற்புதமாக இருக்கப் போகிறது. அமைதியும் ஆனந்தமும் பிறக்கப் போகிறது. குடும்பத்தில் சிறிது நிம்மதியற்ற சூழல் காணப்படும். ஒரு சிலருக்கு பொருளாதார ரீதியிலான கஷ்டங்கள் இருக்கும். சுப காரிய முயற்சிகளில் தடை, தாமதங்கள் உண்டாகும். உங்கள் அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்களிடம் மனஸ்தாபங்கள் ஏற்படலாம். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வெளிவட்டார தொடர்புகள் விரிவடையும். உங்கள் மீதிருக்கும் போட்டி, பொறாமைகள், மறைமுக எதிர்ப்புகள் யாவும் நீங்கி அனைத்திலும் மிக சிறந்த வெற்றிகளை பெற முடியும். குடும்பத்தின் பொருளாதார தேவைகள் அனைத்தையும் நிறைவேற்ற முடியும். வாங்கிய பழைய கடன்கள் அனைத்தையும் கட்டி தீர்க்க முடியும். சிலர் புதிய மனை, வீடு போன்றவற்றை வாங்கும் அளவிற்கு பொருளாதார நிலை உயரும்.
உத்யோகத்தில் நீங்கள் விரும்பிய பதவி உயர்வுகளும், பணியிட மாறுதல்களும் கிடைக்கும். வெளிநாடு சென்று பணிபுரியும் யோகமும் சிலருக்கு உண்டாகும். பணியிடங்களில் தங்களின் பணிகளை செய்வதில் மட்டுமே கவனம் செலுத்துவது நல்லது. தொழில், வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். தொழில் வியாபாரங்களில் பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும்.
பரிகாரம் : இந்த வருடம் முழுவதும் சூரிய பகவானை வழிபடவும்
முக்கிய குறிப்பு : இந்த 2020ல் மாதம் தோறும் வரும் சந்திராஷ்டம தினத்தில் மட்டும் சிறிது எச்சரிக்கையாக இருக்கவும்.
Astrology Predictions Written By :
" Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology).
Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831